என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
  X
  சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

  ரூ.1.9 கோடி மதிப்பில் பன்னம்பாறை -செட்டிக்குளம் சாலை பணி-ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை -செட்டிக்குளம் சாலை பணி அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  சாத்தான்குளம்:

  சாத்தான்குளம்  அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சுமார் 1 கி.மீ தூரமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் இதுகுறித்து முறையிட்டனர்.

  இதையடுத்து அவர் பரிந்துரையின்படி பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சேதமான சுமார்  1400 மீட்டர் தொலைவில் சாலை அமைக்க ரூ.1கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடக்க விழா   நடைபெற்றது. சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் விக்ரமசிங் தலைமை தாங்கினார்.

  யூனியன் தலைவர்  ஜெயபதி, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்  பார்த்தசாரதி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவர்   அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை ஆய்வாளர் சுப்பிரமணியன்  வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக  சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

  இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  சங்கர், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன்,  நகர தலைவர் வேணுகோபால், வட்டார தலைவர்கள்  லூர்துமணி, சக்திவேல்முருகன், கோதாண்டராமன், நகர துணைத் தலைவர் கதிர்வேல், நகர மகிளா காங்கிரஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

  Next Story
  ×