search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது
    X

    சந்தனக்கூடு திருவிழா மவ்லீதுடன் தொடங்கியது.

    சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது

    • சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
    • சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் உலகப் பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார். இந்த தர்காவில் வருடந்தோறும் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த வருடம் 849-ம் ஆண்டு உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி மகரீபு தொழுகைக்கு பின் மவ்லீது (புகழ் மாலை) ஓதப்பட்டு நேற்று தொடங்கியது. இதை யொட்டி தர்கா அக்தார்கள் முன்னிலையில் ராமநாத புரம் மாவட்ட டவுன் ஹாஜியார் சலாஹூதீன் ஆலிம் தலைமையில் புகழ்மாலை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தொடர்ந்து தர்கா மண்டபத்தில் இருந்து ஹக்தார்களால் மவ்லீது ஷரீப் எனும் புகழ்மாலை 23 நாட்களுக்கு ஓதப்படுகி றது. அதனை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி 13-ந் தேதி அதிகாலை வரை நடக்கிறது. மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, நாட்டியக் குதிரைகள் நடன மாட, சந்தனக்கூடு பவனி வருகிறது. அனைத்து சமுதாயத்தினரின் அணி வகுப்புடன் புனித மக்பரா வில் சந்தனம் பூசப்படும்.

    19-ந் தேதி நிறைவு நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப்பின் கொடி யிறக்கம் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு விநியோகிக்கப்பட்டு 849-வது உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர். யாத்ரீகர்க ளுக்கான சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    Next Story
    ×