search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BHOOMI PUJA"

    • வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள்.
    • வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

    வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு. இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான். இன்று வாஸ்து நாள். வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாட்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

     வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும். பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜைசெய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். இன்று பூமி காரகனாகிய செவ்வாய்க்கிழமை வாஸ்து செய்வது விசேஷம். இன்று வேறு தோஷங்கள் பார்க்க வேண்டாம். நேரம், வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.12 முதல் 10.42 வரை வாஸ்து செய்ய நல்ல நேரம் ஆகும்.

    • மிகவும் பழுதடைந்த சாலைகளை அப்பகுதி மக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
    • புதியதாக தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    குளித்தலை

    கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பஞ்சப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சபட்டியில் மிகவும் பழுதடைந்த சாலைகளை அப்பகுதி மக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டம் 2022-23-ன் கீழ், ரூ.55.91 லட்சம் மதிப்பில் பஞ்சப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி முதல் தாதம்பட்டி வரை புதியதாக தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளித்தலை மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில், கிருஷ்ணராயபுரம் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகாலன், பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி சத்தியமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சரவணன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், பஞ்சப்பட்டி சந்திரசேகர், மற்றும் ஒப்பந்தகாரர் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

    • செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார்.
    • முடிவில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் மதிப்பில் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல்பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய குழு தலை வர் விஜயகுமார் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரிதி, கணேசன், பிரவீன் குமார், பேரூராட்சி செயல் அலு வலர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

    • அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்
    • நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றுவதாக உறுதி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், உலிக்கல் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நான்சச் சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளியில் 2019-2020 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆனைப்பள்ளம் சாலையினையும், 2022-2023-15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை பிரதான சாலை முதல் வெள்ளாளமட்டம் வரை முடிக்கப்பட்ட சிமெண்டு சாலையினையும் என மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார்.

    மேலும், அவர் 2022-2023 நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.23 கோடி மதிப்பில் முத்தநாடு ரோல் மட்டம் முதல் பவானி வரையிலும், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பனாட்டி பிரிவு முதல் இருட்டு சோலை, கொலக்கொம்பை முதல் முத்தநாடு வரையிலும், ரூ.1.83 கோடி மதிப்பில் ட்ரூக் முதல் நான்சச் தேயிலை தொழிற்சாலை வரை சாலை மேம்பாட்டு பணிகள் என மொத்தம் ரூ.4.06 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள பணிக ளுக்கு பூமி பூஜைகளை தொடங்கிவைத்தார்.

    செங்கல்புதூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணியினை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ளும் விதமாக பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்- பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்பு
    • காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கிராமத்தில் தீப ஒளி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்தப் பள்ளியில் வடிகால் வசதி வாய்க்காலுடன் உணவு அறை தரைதளம் அமைக்கும் பணிக்காக புதுவை பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் இந்தப் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது.

    வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் வடிகால் வசதியுடன் கூடிய தரைதளம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்க ப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திகேயன், பா.ஜனதா தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன் காங்கிரஸ் மாநில செயலாளர் ஊசுடு செந்தில்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் பாபு என்ற பழநிராஜா, பா.ஜனதா நிர்வாகி தொண்டமாநத்தம் தமிழ் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்துக்கு கடந்த 1957-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து அப்போதைய அமைச்சர் கக்கன் 1958 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் புதிய கட்டிடம் கட்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது.

    இதற்காக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு பின்பகுதியில் தற்காலிக அலுவலகத்திற்காக ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்த நிலையில் ஏற்கனவே இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, உஷாராணி, மாயாண்டி, சாந்தி மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் தலைவர் வேட்டையன் பங்கேற்காமல் நிகழ்ச்சியை புறக்கணித்தார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் 4 கவுன்சிலர்கள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

    • பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலாஜி நகரில் சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாண்டவர்மங்கலம் ஊராட்சி பாலாஜி நகரில் ரூ.5.50 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி இல்லத் தெருவில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், நகராட்சி உதவி பொறியாளர் சரவணன், அ.தி.மு.க. நகர செயலர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாராப்பூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
    • கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி யின் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அங்கு படித்த பள்ளி மாணவ-மாணவிகள் அருகாமையில் உள்ள எஸ்.புதூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி போன்ற பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் இப்பள்ளி யில் கல்வி பயின்ற முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் சேதுராமன் பார்வைக்கு இதுகுறித்து வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர் மனைவி காமினி, சந்திரசேகர், மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன், கட்டிட பொறியாளர் நாகராஜன், தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை, அரசு அதிகாரிகள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்

    • அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் வராததால் யூனியன் அலுவலக கட்டிட பூமி பூஜை 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
    • தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் சில இடங்கள் பழுதடைந்து விட்டதால் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் இடம் தேர்வு செய்யப்பட்டடது.

    நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம்,கருவூலம் என அடுத்தடுத்து அலுவலகங்கள் அருகில் இருந்ததால் இந்த இடம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்து 2 முறையும் அமைச்சர் வராததால் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

    ராஜபாளையத்தில் நேற்று தி.மு.க இளைஞர் அணியினருக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். ராஜபாளையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா உள்பட தி பலர் கலந்து கொண்டனர் .

    இந்த நிலையில் அமைச்சர் பூமிபூஜையை நடத்திவைப்பார் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஏற்கனவே 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட ராஜபாளையம் மாடசாமி கோவில் செல்லும் சாலையில் யூனியன் அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 3-வது முறையாக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்தது.

    நேற்றும் அடிக்கல் நாட்ட அமைச்சர் வரமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் 3-வது முறையாக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பூமிபூஜைக்கான தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    யூனியன் அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதில் தி.முக.வினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளவுபட்டு கிடப்பதால் அரசு பணம் விரயம் ஆகிறது.

    பல்வேறு பணிகளை ஒதுக்கிவிட்டு இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் 3-வது முறையாக பூமிபூஜை ஒத்தி வைக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    3-வது முறையாக பூமிபூஜை தடைபட்டுவிட்டதால் இதை கெட்ட சகுனமாக எடுத்துக் கொண்டு யூனியன் அலுவலகத்திற்கு வேறு இடம் தேர்வு செய்வதுதான் நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • நந்தவனத்தில் பூமி பூஜை நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்

    ராஜபாளையம்

    புனாச்சாமியார் மடம் நந்தவனம் சாலியர் சமூகம் அறக்கட்டளை சார்பில் ராஜபாளையம்- சத்திரப்பட்டிரோட்டில் இனாம்தோப்புபட்டியில் உள்ள புனாச் சாமியார் மடம் நந்தவனத்தில் பூமி பூஜை நடந்தது.

    அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தற்காலிக டிரஸ்டி ஆறுமுகபெருமாள் தலைமை தாங்கினார். செயல் தலைவர் குருபாக்கியம்,செயலாளர் வேலுசாமி, பொருளாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையை நடத்தி வைத்தார்.

    இதில் அறங்காவலர்கள் பழனிசாமி, சிவலிங்கம், மன்னன், ஆறுமுகசாமி, தங்கமணி, கருத்தஞானியார், முத்துராமலிங்கம், சோமசுந்தரம், ஞானகுரு, புதியராஜ், பொன்னுச்சாமி, மாடசாமி, ராமகிருஷ்ணன், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி,மணிகண்ட ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமளன்குளம் ஊராட்சியில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜையில் அடிக்கல் நாட்டு தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் வருவாய்த்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும் , ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் வழங்கினார் . மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ( வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் மற்றும் அம்பலகாரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பதினெட்டாங்குடி ஊராட்சியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் சட்டமன்றஉறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணியினை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ.,முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், மேலூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பதினெட்டாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஆண்டி, துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் மற்றும் அம்பலகாரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ×