search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செஞ்சி அரசு மகளிர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
    X

    அரசு மகளிர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    செஞ்சி அரசு மகளிர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

    • செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார்.
    • முடிவில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் மதிப்பில் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல்பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய குழு தலை வர் விஜயகுமார் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரிதி, கணேசன், பிரவீன் குமார், பேரூராட்சி செயல் அலு வலர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

    Next Story
    ×