search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New School Building"

    • ரூ.28 லட்சம் செலவில் உடன்குடி யூனியன் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • இதனை சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் செட்டியாபத்து ஊராட்சி சிவலூரில் தமிழக அரசின் குழந்தைகள் நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.28 லட்சம் செலவில் உடன்குடி யூனியன் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இதன் தொடக்க விழாவில் சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிவலூர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரெத்தினாவதி தலைமை தாங்கினார். செட்டியாபத்து ஊராட்சி தலைவர் க.பாலமுருகன் குத்து விளக்கு ஏற்றினார். சிவலூர் ஊர் தலைவர் முருகன், சுந்தர் விஜயன், ரவி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பவுலா ராதிகா வரவேற்றார். இதில் செட்டியாபத்து ஊராட்சிசெயலர் கணேசன் உட்பட ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர். ஆசிரியை ராதை நன்றி கூறினார்.

    • ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது.
    • கலெக்டர் சங்கீதா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 88-வது வார்டு அனுப்பானடி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை கலெக்டர் சங்கீதா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதி வுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாக ராஜன், மண்டல தலை வர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சி லர்கள் சோலை ராஜா, பிரேமா, முத்துமாரி ஜெயக்குமார், செல்வம், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், 88-வது வார்டு வட்ட செயலாளர் தாமோதரன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புதிய பள்ளி கட்டிடம், புனரமைக்கப்பட்ட கட்டிடம், புதிய பொது சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
    • விளாத்திகுளம் பஸ் நிலையம் உட்புறத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான பொது சுகாதார வளாகத்தையும் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புதிய பள்ளி கட்டிடம், புனரமைக்கப்பட்ட கட்டிடம், புதிய பொது சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. மார்கண்டேயன் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் பிறப்பு முதல் 14 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக்கான விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய கல்வி மைய கட்டிடத்தையும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பள்ளியின் அனைத்து புணர் அமைப்பு செய்யப்பட்ட கட்டிடத்தையும், விளாத்திகுளம் பஸ் நிலையம் உட்புறத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான பொது சுகாதார வளாகத்தையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் ஜே.எஸ்.டபிள்யூ திட்ட மேலாளர் தென்னவன், மண்டல மேலாளர் பாரதி பழனிச்சாமி, அலுவலர் சுப்பிரமணி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, தாசில்தார் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அயன் ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு சின்ன மாரிமுத்து, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமலிங்கம், நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் ,வார்டு செயலாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பணிகள் முடிந்து 4 மாதங்களாகியும் பள்ளி கட்டிடம் திறக்கப்பட வில்லை.
    • பள்ளி மாணவர்கள் நாடக மேடையில் அமர்ந்து படிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புதுக்களராம்பட்டியில் ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது.

    பணிகள் முடிந்து 4 மாதங்களாகியும் பள்ளி கட்டிடம் திறக்கப்பட வில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் வெயிலில் நாடக மேடையில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு பெரும் வேதனை அளித்து வருகிறது.

    இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், கடும் கோடை வெயிலில் பெரியவர்களே வெளியில் வர அச்சப்படும் நிலையில் பள்ளி மாணவர்கள் நாடக மேடையில் அமர்ந்து படிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு பள்ளியை திறக்க வேண்டும் என்றனர். இதேபோல் தங்கம்மாபட்டி அங்க ன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாத ங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே வடமதுரை பகுதிகளில் புதிய கட்டிடங்களை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வாராப்பூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
    • கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி யின் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அங்கு படித்த பள்ளி மாணவ-மாணவிகள் அருகாமையில் உள்ள எஸ்.புதூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி போன்ற பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் இப்பள்ளி யில் கல்வி பயின்ற முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் சேதுராமன் பார்வைக்கு இதுகுறித்து வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர் மனைவி காமினி, சந்திரசேகர், மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன், கட்டிட பொறியாளர் நாகராஜன், தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை, அரசு அதிகாரிகள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்

    ×