search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பள்ளி கட்டிட பூமி பூஜை
    X

    பள்ளி கட்டிட பூமிபூஜை நடந்தது.

    புதிய பள்ளி கட்டிட பூமி பூஜை

    • வாராப்பூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
    • கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி யின் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அங்கு படித்த பள்ளி மாணவ-மாணவிகள் அருகாமையில் உள்ள எஸ்.புதூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி போன்ற பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் இப்பள்ளி யில் கல்வி பயின்ற முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் சேதுராமன் பார்வைக்கு இதுகுறித்து வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர் மனைவி காமினி, சந்திரசேகர், மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன், கட்டிட பொறியாளர் நாகராஜன், தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை, அரசு அதிகாரிகள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்

    Next Story
    ×