search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணராயபுரம் பஞ்சபட்டியில்  ரூ.55.91 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க  பூமி பூஜை
    X

    கிருஷ்ணராயபுரம் பஞ்சபட்டியில் ரூ.55.91 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க பூமி பூஜை

    • மிகவும் பழுதடைந்த சாலைகளை அப்பகுதி மக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
    • புதியதாக தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    குளித்தலை

    கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பஞ்சப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சபட்டியில் மிகவும் பழுதடைந்த சாலைகளை அப்பகுதி மக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டம் 2022-23-ன் கீழ், ரூ.55.91 லட்சம் மதிப்பில் பஞ்சப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி முதல் தாதம்பட்டி வரை புதியதாக தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளித்தலை மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில், கிருஷ்ணராயபுரம் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகாலன், பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி சத்தியமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சரவணன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், பஞ்சப்பட்டி சந்திரசேகர், மற்றும் ஒப்பந்தகாரர் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

    Next Story
    ×