நந்தவனத்தில் பூமி பூஜை

நந்தவனத்தில் பூமி பூஜை நடந்தது. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்
பூமிபூஜையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
பூமிபூஜையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
Published on

ராஜபாளையம்

புனாச்சாமியார் மடம் நந்தவனம் சாலியர் சமூகம் அறக்கட்டளை சார்பில் ராஜபாளையம்- சத்திரப்பட்டிரோட்டில் இனாம்தோப்புபட்டியில் உள்ள புனாச் சாமியார் மடம் நந்தவனத்தில் பூமி பூஜை நடந்தது.

அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தற்காலிக டிரஸ்டி ஆறுமுகபெருமாள் தலைமை தாங்கினார். செயல் தலைவர் குருபாக்கியம்,செயலாளர் வேலுசாமி, பொருளாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையை நடத்தி வைத்தார்.

இதில் அறங்காவலர்கள் பழனிசாமி, சிவலிங்கம், மன்னன், ஆறுமுகசாமி, தங்கமணி, கருத்தஞானியார், முத்துராமலிங்கம், சோமசுந்தரம், ஞானகுரு, புதியராஜ், பொன்னுச்சாமி, மாடசாமி, ராமகிருஷ்ணன், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி,மணிகண்ட ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com