search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் ரூ.4.06 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
    X

    நீலகிரியில் ரூ.4.06 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

    • அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்
    • நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றுவதாக உறுதி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், உலிக்கல் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நான்சச் சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளியில் 2019-2020 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆனைப்பள்ளம் சாலையினையும், 2022-2023-15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை பிரதான சாலை முதல் வெள்ளாளமட்டம் வரை முடிக்கப்பட்ட சிமெண்டு சாலையினையும் என மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார்.

    மேலும், அவர் 2022-2023 நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.23 கோடி மதிப்பில் முத்தநாடு ரோல் மட்டம் முதல் பவானி வரையிலும், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பனாட்டி பிரிவு முதல் இருட்டு சோலை, கொலக்கொம்பை முதல் முத்தநாடு வரையிலும், ரூ.1.83 கோடி மதிப்பில் ட்ரூக் முதல் நான்சச் தேயிலை தொழிற்சாலை வரை சாலை மேம்பாட்டு பணிகள் என மொத்தம் ரூ.4.06 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள பணிக ளுக்கு பூமி பூஜைகளை தொடங்கிவைத்தார்.

    செங்கல்புதூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணியினை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ளும் விதமாக பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×