search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mandatory"

    • பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும்.
    • கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

    காங்கயம்:

    தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும். சில நேரங்களில் இந்த உரங்களுக்கான தட்டுப்பாடு இருக்கும். ஆனால் அதைச்சார்ந்து வேறு பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இணை உரப்பிரச்சினை பாடாய்படுத்துகிறது.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்ற விவசாயிகளிடம், விற்பனையாளர்கள் டி.ஏ.பி. ஒரு மூட்டை வேண்டுமெனில் அதே கம்பெனியின் மற்றொரு உரம் ஒரு மூட்டை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கினர்.

    இதனால் ஆங்காங்கே விவசாயிகள் உரவிற்பனைக் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினர். அத்துடன் இதுபற்றிய தகவல் வேளாண்மை துறைக்கு தெரிவிக்கப்பட்டு வேளாண்துறை அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி எச்சரிக்கை செய்து வந்தனர்.

    குறிப்பாக வெங்காய சாகுபடி சீசன், மக்காச்சோள சாகுபடி சீசன் தொடங்கிவிட்டால் போதும் இந்த பிரச்சினையும் தொடங்கிவிடும்.

    காங்கயம், தாராபுரம், குண்டடம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பொன்னாபுரம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மற்றும் பி.ஏ.பி. அமராவதி தண்ணீரைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர். மக்காச்சோளத்திற்கு முதல் உரமாக யூரியா கொடுப்பது வழக்கமாக உள்ளது.

    இதனால் அடுத்த மாதம் தொடங்கி யூரியாவின் தேவை அதிகரிக்கும். அப்போது இந்த இணை உரப்பிரச்சினையை உரநிறுவனங்கள் தொடங்கி விடுவர். அதே போல அடுத்த சில மாதங்களில் வெங்காயம் சாகுபடி தொடங்கும் நேரத்தில் டி.ஏ.பி.யின் தேவை அதிகரிக்கும். அப்போதும் இந்த பிரச்சினை தொடங்கிவிடும்.

    இது பற்றி விவசாயிகள் கூறுகையில்,கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு அதிகாரிகள் முன்னதாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது தொடர்பாக உர விற்பனையாளர்கள் கூறுகையில் ,நாங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இல்லையெனில் ஸ்டாக் தர மறுக்கின்றனர். அதனால் வேறு வழியின்றி அந்த உரங்களை வாங்க வேண்டி உள்ளது.

    அதனால் வேளாண்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உரவிற்பனையாளர்கள், விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றனர்.

    • பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
    • எனவே இவ் விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரி பார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல், மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 4,831 விவசாயிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படாமல் நிலுவை யில் உள்ளது. எனவே இவ் விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரி பார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.

    மேலும் 4,744 விவசாயி கள் தங்களது பயன்பாட்டி லுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவ ரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள் ளது. எனவே ஆதார் விவ ரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளி களுக்கு பிரதமரின் விவசாயி களுக்கான நிதி உதவி திட்டத்தின் 14-வது தவணை தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆதார் விவ ரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 14-வது தவணைத் தொகையினை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவ ரங்களை இணைத்திட வேண்டும். இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலு வலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.

    மேலும் அஞ்சல் அலுவல கங்களில் வங்கி கணக்கு தொடங்கும் பொழுது 48 மணி நேரத்திற்குள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணியாமல் சென்று வருகின்றனர். இதனால் சாலை விபத்துகளின்போது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.அதேபோல கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் பயணிந்து வருகின்றனர்.

    சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ெஹல்மெட் அணிவது வருகிற 1-ந் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா கூறியிருப்பதாவது:-

    வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் ெஹல்மெட் அணிந்து விபத்தை தடுத்திட போலீஸ் துறைக்கு ஒத்துைழப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். 

    பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என தொடர்ப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Aadhaar #SocialMedia #MadrasHC
    சென்னை:

    பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் கணக்கு தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணையின் போது, சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாளுவது குறித்து வரும் 20-ம் தேதி நேரில் விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இது மிகவும் ஆபத்தான கோரிக்கை. இதனால், தனிநபரின் அந்தரங்க உரிமை பாதிக்கும் என்றார். எனினும், இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு வரும் 20-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது இனி கட்டாயமாக ஜெய் ஹிந்த் கூற வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. #mpgovt #jaihind
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேசியக்கொடி ஏற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பிரசண்ட் என்பதற்கு பதிலாக இனி 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

    அதன்படி இந்த முறையானது சட்னா மாவட்டத்தில் முதன்முதலாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.



    இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை அதிகப்படுத்தலாம். ஜெய் ஹிந்த் என கூறுவது அனைத்து மத மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும். இது இளம் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க உதவும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணாக்கார்கள் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது தங்கள் பெயருக்கு பதிலாக கட்டாயமாக ஜெய் ஹிந்தி கூற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. #mpgovt #jaihind



    ×