search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "housing"

    • வீட்டு வசதி வாரிய மனைநிலங்கள் விற்பனையில் புதிய நடைமுறையை கைவிட வேண்டும்.
    • சாமானியர்கள், நடுத்தர வகுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு மனை நிலங்களை முதல் விற்பனையின்போது குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விற்பனை செய்வது வழக்கமான நடைமுறை.

    இந்த நடைமுறையின் போது சதவீத அடிப்படை யில் ஆதிதிராவிடர்களுக்கு 18, பழங்குடியினருக்கு 1, அரசு ஊழியர்களுக்கு 18, மத்திய அரசு ஊழியர்களுக்கு 8, ராணுவத்தினருக்கு 7, சலவையாளர்கள் மற்றும் மருத்துவ சமுதாயத்தினருக்கு 4, பத்திரிகையாளர்களுக்கு 3, மொழிப்போர் தியாகிகளுக்கு 1, வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கு 38 என்ற அடிப்படையில் மனை நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்போது வீட்டு வசதி வாரியம் இந்த நடை முறையை கைவிட்டு மனைநிலங்கள் முதல் விற்பனையின்போது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் மனை நிலங்களை விற்பனை செய்யும் நடை முறையால் ஒதுக்கீட்டு முறையில் தேர்வு செய்யப் படாமல் சாமானிய, நடுத்தர மக்களுக்கும் மனை நிலங்கள் கிடைக்க வாய்ப்பில்லாமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே மனை நிலங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

    இதுவரை வீட்டுவசதி வாரிய மனை நிலங்களுக்கு சந்தை விலையை விட 20 சதவீதம் விலை குறை வாகவே நிர்ணயம் செய்து வந்தது. ஆனால் தற்போது சந்தை விலையை கணக்கிட்டு அதன் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே தமிழக அரசு புதிய நடைமுறையான முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் விற்பனை செய்வதை கைவிட்டு பழைய ஒதுக்கீட்டு நடை முறையை பின்பற்றுவதோடு 2-வது விற்பனையில் வேண்டுமானால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு 165 வீடுகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மீனவ வீட்டு வசதி திட்டத்தில் மீனவர்க ளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து ராமநாத புரம் மாவட்டத்திற்கு 165 வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு உறுப்பி னர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலு வலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ராமநாத புரம் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்கு நர்கள் அல்லது துணை இயக்குநர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ள லாம்.

    விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தினை அரசு வழிகாட்டு நெறி முறைகளின்படி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவே அல்லது நேரடியாகவே 30.11.2023 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்மந்தப் பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி அல்லது துணை இயக்குநர் அலுவலங்களை தொடர்புகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரவித்துள்ளார்.

    • கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்,
    • கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு சிக்கனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சூலூர்,

    சூலூர் வட்டாரம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட நாகதேவன் குட்டை பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அரசு ஊராட்சியின் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வநாயகி அன்பரசு, துணைத்தலைவர் சுதா, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை உமாசங்கரி, கிராம நிர்வாக அலுவலர்கள் அசோகன் மற்றும் ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு சிக்கனம், ஊராட்சி வளர்ச்சி பணிகள் விவரம், சுகாதாரம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், திட திரவக்கழிவு மேலாண்மை, நாகதேவன் குட்டை, கொள்ளுப்பாளையம் பள்ளிக்கூடம் பின்புறம் உள்ள பகுதி மற்றும் சங்கோதிபாளையம் கள்ளிக்குழி பகுதிகளில் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது.
    • தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி த்தலைவ ர்பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
    • கட்சியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்


    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் மன்றம் பொறுப்பு ஏற்றும் நிரந்தர செயல்அலுவலர் இல்லை என மன்ற அங்கத்தினர்கள் மற்றும் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் ஏற்கனவே பல பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணிபுரிந்த முகம்மது இப்றாகிம் என்பவரை தேனி மாவட்டத்தில் இருந்து மாறுதல் செய்து நியமனம் செய்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்ற செயல்அலுவலர் முகம்மது இப்றாகிம் கடந்த 2 நாட்களாக பேரூராட்சியில் நடைபெற்றுவரும் திட்டபணிகளிளை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் உடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து செயல்அலுவலர் முகம்மது இப்றாகிம் மன்ற கூட்டத்தினை நடத்த ஏற்பாடு செய்தார். பேரூராட்சி தலைவர் வள்ளி தலைமையில் கூட்டம் நடத்தி அனைத்து மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு பல தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

    பேரூராட்சியில் சொத்துவரி குளறுபடியால் பலருக்கும் அதிகமாக வரிவிதிப்பு செய்யபட்டுள்ளது என கூறி கடந்த வாரம் நடைபெற்ற மன்ற கூட்டத்தினை பலர் வெளிநடப்பு செய்து மன்ற கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

    மேலும், டான்டீ ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிரந்தர குடியிருப்பு வழங்க உத்திரவாதம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு பேரூராட்சி மன்றம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    • விலையில்லா இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை.
    • சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ்கொலை செய்யப்பட்ட வாரிசுதா ரர்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களும், 3 நபர்களுக்கும், ஆதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டாவிற்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 1 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி தலா ரூ. 25,000 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 26 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-, மாணவிகள் கலெக்டரிடம் வெற்றி பெற்ற பதக்கங்களை காண்பித்து பாராடடு மற்றும் வாழ்த்துக்களை பெற்றனர்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நலச் சேவை அமைப்பினர் தலைவர் என்.ஈஸ்வரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனா். அவா்கள், ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினா்.

    இது குறித்து மக்கள் நல சேவை அமைப்பின் தலைவா் ஈஸ்வரி கூறுகையில் கடந்த 3 மாதங்களாக இலவச வீட்டு மனை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம். இனியும் தாம–தப்படுத் தும்பட்சத்தில் காலியாக உள்ள அரசுக்குச் சொந்த மான நிலங்களில் நாங்களாகவே குடியேறி விடு–வோம் என்றாா்.

    • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.
    • கலெக்டர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லதா (வயது40). இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு நிவேதா (16) என்ற மகளும், ஹரி (10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லதாவின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

    தென்னந்தோப்பில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். லதா சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனை அறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.இதனை கொண்டு புதிய வீடு கட்டப்பட்டது. நேற்று அசோக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார். முன்னதாக நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் பஹாத் முகமது வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ருக்குமணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜலெட்சுமி மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க ஒன்றிய செயலாளர் முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • சிங்கம்புணரியில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

    ங்கம்புணரி, ஜூன். 22-

    சிவகங்கை மாவட்டம் வடசிங்கம்புணரி விழுப்புனிக்களம், சிலோன் காலனி பகுதிகளில் வசிக்கும் 26 பேர் 2021 ஜூலை மாதம் ஆன்லைன் மூலம் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்தனர். அது சம்பந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் சர்வதேச உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் பெரியய்யா என்ற ராஜா தலைமையில் சிங்கம்புணரி தாசில்தாரிடம் மீண்டும் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் துஸ்யந்தன், திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் அன்பரசன், ஒன்றிய செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் குழந்தான் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். 

     வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் உரிமையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பேரூராட்சி மற்றும் நகராட்சிகளிலும் திட்டப் பணிகளை செயல்படுத்த மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். 

    இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் தனசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் தம்பிராஜா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
    ×