search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Dravidar"

    • 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.
    • விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர்-பழங்குடியினர் 60 சதவீத மானியத்தில் பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டு திட்டங்களில் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புறக்கடையில் சிறிய அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.

    பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு அலகு அமைக்க 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4.20 லட்சம் மானியமும், புதிய மீன் வளர்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு செலவினம் வழங்க 60 சதவீத மானியமாக அதிக பட்சம் ரூ.6.60 லட்சம் மானியமும் வழங்கப்படும்.

    மேற்காணும் மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் நல்ல தங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வளஆய்வாளர் (தொலைபேசி எண். 89037 46476 அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் எண்: 7-ம் தளம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638 011 தொலைபேசி எண்: 0424 2221912 யை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் ெதரிவித்துள்ளார்.

    • விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது.
    • இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் மானி யத்துடன் கூடிய தொழிற் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந் துரை செய்யப்படுகிறது. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனை வோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம்.

    வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்திட்டத் தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். 18 முதல் 55 வயது குட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மை யாக கொண்டு செயல் படுத்தக்கூடிய தொழிழ்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக் லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி, அழகு நிலையம், ஆம்பு லன்ஸ் சேவை, உடற் பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கு வோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    சுயமுத லீட்டில் தொழில் தொடங்கி னாலும், இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம். மேலும், கடலூர் மாவட் டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரில் வந்து அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.
    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

    கடலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு சென்னை தரமணியிலுள்ள மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. 2022 - ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்டபடிப்பு ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு மேலும் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு , ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவிைனஞர் பட்டய படிப்பு மேற்கண்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். 10- வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட முழு நேர பட்டபடிப்பு பயில தேர்வு நடத்தப்படும். மேலும் நிறுவனத்தில் தாட்கோ மூலம் இலவசமாக சென்னையில் வழங்கப்படும். தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி-27.04.2023 இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற தாட்கோ இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • மதுரையில் ஆதிதிராவிட பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரையில் மக்கள் தேசம் கட்சியின் அகில இந்திய ஆதிதிராவிட பறையர் பேரவை ஆலோசனை கூட்டம் தலைவர் வக்கீல் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. இதில் மாநில துணைத் தலைவர் கே.பி.கே., செயலாளர் குருவிஜய், பொதுச்செயலாளர் வேதமணி, தலைமை நிலைய செயலாளர் திருமுருகன், மதுரை மாவட்ட செயலாளர் சேவியர் இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் திருசெல்வம், பால்ராஜ், சுலைமான், சுரேஷ், வாசு, பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம் கிளைக்கழகம் அளவில் கட்சியை பலப்படுத்துவது, ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, ஜூலை 7-ந்தேதி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென் மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பேரணியை நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது.
    • தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி த்தலைவ ர்பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா்.
    • குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதால் தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா். எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்துக்கு மாநில தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜா, பொதுச்செயலாளர் செல்வகுமார், செயலாளர் கஸ்பர், பொருளாளர் கபரியேல், நிர்வாகிகள் சீனிவாசபெருமாள், குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன், தமிழர்களம் அழகர், திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடை ராயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை ஒருங்கிணைந்த வளர்ச்சி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக அரசாணை வெளியிட வேண்டும்.

    கல்வி உதவித்தொகையை தடையின்றி முழுமையாக வழங்க வேண்டும். சிறப்புக்கூறு நிதியை வேறு துறைகளை மாற்றக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதை நிறைவேற்றாத என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசை கண்டித்தும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    முன்னதாக இயக்கத்தின் நிர்வாகிகள் முருகா தியேட்டர் சிக்கனல் அருகில் ஒன்றுகூடி அங்கிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களை துறை அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    அங்கு வந்த நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையேற்று முற்றுகையை கைவிட்டு நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.

    ×