search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகை
    X

    ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி.

    ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகை

    • புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்துக்கு மாநில தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜா, பொதுச்செயலாளர் செல்வகுமார், செயலாளர் கஸ்பர், பொருளாளர் கபரியேல், நிர்வாகிகள் சீனிவாசபெருமாள், குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன், தமிழர்களம் அழகர், திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடை ராயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை ஒருங்கிணைந்த வளர்ச்சி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக அரசாணை வெளியிட வேண்டும்.

    கல்வி உதவித்தொகையை தடையின்றி முழுமையாக வழங்க வேண்டும். சிறப்புக்கூறு நிதியை வேறு துறைகளை மாற்றக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதை நிறைவேற்றாத என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசை கண்டித்தும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    முன்னதாக இயக்கத்தின் நிர்வாகிகள் முருகா தியேட்டர் சிக்கனல் அருகில் ஒன்றுகூடி அங்கிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களை துறை அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    அங்கு வந்த நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையேற்று முற்றுகையை கைவிட்டு நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.

    Next Story
    ×