ஆதிதிராவிட பேரவை ஆலோசனை கூட்டம்

மதுரையில் ஆதிதிராவிட பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆதிதிராவிட பேரவை ஆலோசனை கூட்டம்
Published on

மதுரை

மதுரையில் மக்கள் தேசம் கட்சியின் அகில இந்திய ஆதிதிராவிட பறையர் பேரவை ஆலோசனை கூட்டம் தலைவர் வக்கீல் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. இதில் மாநில துணைத் தலைவர் கே.பி.கே., செயலாளர் குருவிஜய், பொதுச்செயலாளர் வேதமணி, தலைமை நிலைய செயலாளர் திருமுருகன், மதுரை மாவட்ட செயலாளர் சேவியர் இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் திருசெல்வம், பால்ராஜ், சுலைமான், சுரேஷ், வாசு, பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம் கிளைக்கழகம் அளவில் கட்சியை பலப்படுத்துவது, ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, ஜூலை 7-ந்தேதி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென் மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பேரணியை நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com