26 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் வழங்கினார்

விலையில்லா இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை.சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.
பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ்கொலை செய்யப்பட்ட வாரிசுதா ரர்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களும், 3 நபர்களுக்கும், ஆதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டாவிற்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 1 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி தலா ரூ. 25,000 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 26 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-, மாணவிகள் கலெக்டரிடம் வெற்றி பெற்ற பதக்கங்களை காண்பித்து பாராடடு மற்றும் வாழ்த்துக்களை பெற்றனர்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com