என் மலர்
நீங்கள் தேடியது "Smaran Ravichandran"
- கர்நாடகா அணி 2வது நாளில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் கருண் நாயர், ஸ்மான் ரவிச்சந்திரன் இரட்டை சதமடித்து அசத்தினர்.
திருவனந்தபுரம்:
ரஞ்சி டிராபி தொடரின் 3வது சுற்று போட்டி நடந்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்நிலையில், 2வது நாளில் கர்நாடக அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கருண் நாயர் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 233 ரன்னில் அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி 343 ரன்கள் சேர்த்து அசத்தியது. அவரைத் தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ரவிச்சந்திரனும் இரட்டை சதமடித்தார்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவிச்சந்திரன் 220 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இரண்டாம் நாள் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்துள்ளது.
- பயிற்சியின் போது ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- மாற்று வீரராக ஆல் ரவுண்டர் ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெறும் 55-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடக்கவுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆடம் ஜாம்பா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் ஸ்மாறன் ரவிச்சந்திரன் மாற்று வீரர்காக தேர்வுசெய்யப்பட்டார்.
பயிற்சியின் போது ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து அவருக்கு பதிலாக, உள்ளூர் போட்டிகளில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் ஆல் ரவுண்டர் ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹர்ஷ் தூபே இதுவரை 16 டி20, 20 லிஸ்ட் ஏ மற்றும் 18 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் 127 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 941 ரன்களையும் சேர்த்து அசத்தியுள்ளார்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
- 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரை SRH ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பேட் கம்மிஸ்ஸ் தலைமையில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம் ஜம்பாவிற்கு பதிலாக 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான ஸ்மரண் ரவிச்சந்திரன் என்பவரை அவரது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்மரண் ரவிச்சந்திரன் கர்நாடகா அணிக்காக இதுவரை 7 முதல்தர போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் சராசரியுடன் 500 ரன்கள் குவித்துள்ளார். அதில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு இரட்டை சதமும் அடங்கும். அதே போன்று லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 72 ரன்கள் சராசரியுடனும் 2 சதங்களுடனும் 433 ரன்களை குவித்துள்ளார்.
அதேபோன்று 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






