search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himalayas"

    • தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
    • தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    கேதார்நாத் கோவில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோவில்களுள் ஒன்றாகும். இது உத்தராகாண்டத்தில் உள்ள, உருத்ர பிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். இக்கோவிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தொலைவு மலை ஏறியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும். ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.

    கோயிலின் முக்கியத்துவம்

    இக்கோவில் ஒரு கவர்ச்சியான கல் கட்டடம் ஆகும். இதன் தொடக்கம் பற்றி அறியக்கூடவில்லை. இக்கோவில் முகப்பில் உள்ள முக்கோண வடிவக் கல்லில் மனிதத் தலை ஒன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு வழமைக்கு மாறான அம்சம் ஆகும்.

    தொடர் கனமழை, வெள்ளப் பெருக்கு / இமயமலை சுனாமி 11.06.2013ல் இப்பகுதியில் வரலாறு காணாத அளவில் கொட்டி தீர்த்த கனமழையினால் உண்டான மழை நீர் வெள்ளப் பெருக்கினால் கேதார்நாத் கோவில் தவிர சுற்றுப்புறப்பகுதிகள் கடுஞ்சேதம் அடைந்தது. இக்கோவில் மதிற்சுவர்கள், ஆதிசங்கரர் சமாதி மற்றும் கோவில் கடைவீதிகள் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மழை வெள்ளப் பெருக்கினால் குறைந்தது ஐந்தாயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு இனி கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி எனும் நான்கு புனித தலங்களுக்கான பயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக உத்தராகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    கடுஞ்சேதத்திற்கு காரணம் கேதார்நாத் கோவில் மூன்று புறங்களிலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டது. அதில் ஒரு மலையில் முகட்டை மூடியிருந்த மிகப்பெரிய பனிகட்டி, கேதார்நாத் கோயிலுக்கு மேற்புறத்தில் இருந்த நீர் தேக்கப் பகுதியில் விழுந்து, அதனால் நீர்தேக்க அணை உடைந்து கடுமையான மழை வெள்ளத்த்துடன், அணைக்கட்டு நீரும் சேர்ந்து கேதார்நாத் பகுதிகளை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

    கோயிலின் வரலாறு

    இந்தக் கோவில் புராண காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டது எனக்கூறப்பட்டாலும், இக்கோவிலின் முதன்மை அமைப்பு 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    இக்கோவில் ஈசனைப் பற்றி சைவக் குரவர்கள் பாடி இருக்கின்றார்கள்.

    "கேதாரம் மேவி னானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார். பன்னிரண்டாம் திருமுறையில், "வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள்.

    இமயமலைப் பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #Himalaya #Earthquake #Magnitude #Scientist
    புதுடெல்லி:

    பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில் இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலக்கடுக்கம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



    புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், கூறுகையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 அளவில் நிலநடுக்கம் அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதனை உறுதி படுத்தும் விதமாக கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக் கோளும் எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

    எச்சரிக்கையின்படி நிலநடுக்கும் ஏற்பட்டால் நேபாள - இந்திய எல்லை பகுதியில் இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 1315 மற்றும் 1440 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்படக்கூடிய இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 600 கிமீ தூரம் வரையில் இருக்கும்.  #Himalaya #Earthquake #Magnitude #Scientist
    ×