என் மலர்tooltip icon

    இந்தியா

    இமயமலையில் விரிவடையும் பனிப்பாறை ஏரிகள் -  திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
    X

    இமயமலையில் விரிவடையும் பனிப்பாறை ஏரிகள் - திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    • இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன.
    • இதில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.

    இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.

    இந்தப் பகுதிகளில் பனிப்பாறை ஏரிகள் விரிவடைவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×