என் மலர்
நீங்கள் தேடியது "glaciers"
- இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன.
- இதில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.
இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.
இந்தப் பகுதிகளில் பனிப்பாறை ஏரிகள் விரிவடைவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
- வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாறை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
- கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் அதிகரிக்கும்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. வெப்பம் அதிகரிப்பு காரணமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடையும் நிலையில் உள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து பனிப்பாறை உடைந்து பிரிந்தது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதற்கு ஏ23ஏ என்று பெயரிடப்பட்டது. சில வாரங்கள் கடலில் இந்த பாறை நகர்ந்தது. அதன்பின் வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் உறைந்தது.
இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கும் நகராமல் உறைந்து இருந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைய தொடங்கி உள்ளது. தற்போது மீண்டும் உடைந்து அந்த பாறை நகர தொடங்கி உள்ளது.
இந்த பனிப்பாறை அடுத்த ஒரு மாதத்திற்குள் உடைந்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாறை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ23ஏ பனிப்பாறை இனி இவ்வளவு பெரிதாக நீடிக்க முடியாது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக மேலும் உடையும். இதன் காரணமாக கடலில் நீர் மட்டம் உயரும். இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் அதிகரிக்கும்.
நவீன காலத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல், காற்றுமாசு உள்ளிட்ட காரணங்களால் எதிர்வரும் காலங்களில் பனிமலைகள் முழுவதும் உருகி நீராக மாறக் கூடும் என சில ஆய்வுகள் கூறி வருகின்றன.
இதற்கிடையில் எவரெஸ்ட் பகுதியில், உயரும் வெப்பநிலை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதில் 1922ம் ஆண்டு முதல் இன்று வரை 200க்கும் மேற்பட்ட மலையேறும் வீரர்கள் எவரெஸ்ட் மலையில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பலரது உடல்கள் பனியில் புதைந்து மீட்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் 2100ல் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில் தூத்கோசி ஆற்றின் நீரோட்டப்போக்கை மாற்றிவிடும், வெள்ள அபாயத்தில் மலைவாழ்வினங்கள் அதிகம் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் 75 சதவீதம் மலைகள் உருகி முற்றிலும் மறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது எவரெஸ்ட் மலைப்பகுதிகளில் வெப்பநிலை அதிகமானதையடுத்து, அப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி, அங்கு ஏற்கனவே புதையுண்ட சடலங்கள் அதிகம் தென்படுகின்றன. அவற்றை மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.
இது குறித்து நேபாளத்தின் மலையேறும் சங்கத்தினர் கூறுகையில், 'பனிப்பாறைகளின் இடையில் சிக்கி இருக்கும் சடலங்களை மீட்க, மீட்பு படையினர் அங்கு ஆபத்தான முறையில் முகாமிட்டு மீட்டு வருகின்றனர். எங்கள் சங்கத்தின் சார்பில் 2008 முதல் இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகமாக செலவிடப்படுகிறது. எனவே மத்திய அரசு, இந்த மீட்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார். #EverestGlaciersMelt #deadbodiesrecovered






