என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "snowfall"
- பருவநிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படுகிறது.
- பனிப்பொழிவால் சம்பா சாகுபடி வெகுவாய் பாதிக்கும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக லேசான மழைப்பொழி வோடு அதிகாலை வேளையில் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் நாகப்பட்டினம் மாவட்டம்
கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி, அனக்குடி, இறையான்குடி, கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பனிப்பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவி வருகிறது.
பருவ நிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறாக பொய்யும் பனிப்பொழிவு காரணமாக அறுவடைக்கு தயாராகியுள்ள குறுவை நெற்பயிர்கள் மட்டுமின்றி தற்போது விதைக்கப்பட்டுள்ள சம்பா சாகுபடியும் வெகுவாக பாதிக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால் விபத்துகளை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
இந்த பனிபொழிவால் காலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்பவர்களும், வீடுகளுக்கு பால் மற்றும் பேப்பர் கொண்டு செல்பவர்களும் அவதிய டைந்தனர்.
- வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள் ஆனால், தற்போது அதற்கு மாறாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.
குறிப்பாக இன்று அதிகாலை முதல் கீழ்வேளூர், பட்டமங்கலம்,தேவூர், கிள்ளுக்குடி, அனக்குடி, இறையான்குடி, கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சற்று கூடுதல் பனிப்பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவி வருகிறது.
பருவ நிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படும் சூழலால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதிகாலை வேளையில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் டியூசன் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளதோடு சளி இருமல் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும் எனவும் அச்சமடைந்துள்ளனர்.
நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்கள் முழுவதுமாக பனி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்து வருகிறது.
- திருவாரூரில் அடிக்கடி இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது.
- மன்னார்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. பகலில் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து மாசி மாதத்திற்குள் பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். ஆனால் பங்குனி மாதம் நிறைவு பெற்ற நிலையிலும் பனியின் தாக்கம் குறைந்தபாடில்லை. திருவாரூரில் அடிக்கடி இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் கடுமையாக இருக்கிறது
திருவாரூரில் நேற்று அதிகாலை வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வயல் வெளிகளில் புகைமூட்டம் போல் காட்சி அளித்தது. திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்தன.
மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்திலும் சென்றதையும் காண முடிந்தது.
பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள சுவெட்டர், குல்லா, மப்ளர் உள்ளிட்டவற்றை அணிந்து சென்றனர். அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் நேற்று சிரமப்பட்டனர்.
இதேபோல் நேற்று காலை மன்னார்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்தது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.
இதே போல் திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று காலை கடும் குளிருடன் பனிப்பொழிவு ஏற்பட்டது.
- மீன்சுருட்டியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
- கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது. மேலும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு பனிமூட்டம் நிலவியது. கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. எதிரே வந்த வாகனங்கள் சரிவர தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் விவசாய பணிகள் காலை 9 மணிக்கு மேல் தான் நடைபெற்றது.
- சீர்காழியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
- விபத்தை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டு சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. தற்போது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு முதல் காலை 8 மணி வரை பனி மூட்டம் நிலவி வருகிறது.
இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது.
வாகன ஓட்டிகள் அவதி பனிப்பொழிவால் சாலையில் புகை மூட்டாக காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
காலை 8 மணி வரை வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
மேலும் நடைபயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
சிலர் பனிகுல்லா மற்றும் மப்ளர் உள்ளிட்டவைகளை அணிந்து கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டனர்.
புகையான் நோய் தாக்கம் மழை மற்றும் பனிப்பொழிவு ஆகியவை மாறி, மாறி ஏற்படுவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கம் அதிகரிக்கும் எனவும், கடந்த வாரத்தில் பெய்த கனமழையில் நனைந்த சம்பா நெற்பயிர்கள் காயாத நிலையில் பனி மழை போல் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- கடுமையான பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவு மாவட் டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.
கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, இரணியல், ஆரல் வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 1, பெருஞ்சாணி 6.8, பூதப்பாண்டி 12.6, கன்னிமார் 14.8, கொட்டாரம் 2.4, மயிலாடி 4.2, சுருளோடு 9, தக்கலை 6.2, குளச்சல் 2, இரணியல் 6.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 13.6, கோழிப்போர்விளை 6.4, அடையாமடை 4.2, ஆணைக்கிடங்கு 11.4.
இரவு மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். காலை 9 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் முகப்பு லைட்டுகளை எரிய விட்ட வாறு டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி சென்றனர்.
பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். பனிப்பொழிவின் காரணமாக பெரியவர்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
- தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி சாகுபடி பிரதானமாகவும், கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி சீசன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக ஆயுத பூஜை சீசனை இலக்காக வைத்து பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பின்னர் முகூர்த்த சீசனில் குறைந்த பரப்பில் சாகுபடியாகிறது.முக்கோணம், பாப்பனூத்து, புங்கமுத்தூர், ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமான பூக்கள் கிடைக்க மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடக்கிறது.தும்பலபட்டியில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்து வரும் முருகேசன் கூறியதாவது:-
கடந்த 7 ஆண்டுகளாக கோழிக்கொண்டை பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். இப்பகுதியில் நாற்றுகள் கிடைப்பதில்லை. எனவே ஓசூர் சென்று நாற்று வாங்கி வந்து நடவு செய்தேன். ஏக்கருக்கு 40 ஆயிரம் நாற்றுகள் வரை பிடிக்கும். நடவு செய்த 2 மாதத்துக்கு பிறகு பூக்களை அறுவடை செய்யலாம்.தொடந்து நான்கு மாதங்கள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் பூக்கள் கிடைக்கும். சாகுபடியில் களைச்செடிகளை கட்டுப்படுத்த போராட வேண்டியுள்ளது. மக்காச்சோளம், உளுந்து பயிர் சாகுபடியில் களைக்கொல்லி தெளித்து கட்டு ப்படுத்துகின்றனர். ஆனால் இச்சாகுபடியில் மருந்து தெளிக்க முடியாது என்பதால் தொழிலாளர்களை கொண்டு களை பறிக்க வேண்டியுள்ளது.
இதற்கு அதிக செலவாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை, மகசூல் கிடைக்கும். முகூர்த்த சீசனில் கிலோ 70 - 80 ரூபாய் வரை கோழிக்கொண்டை பூ விற்பனையாகும். பிற நாட்களில் விலை கிடைக்காது.
தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் கருகல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகிறோம். இத்தகைய சீசனில் தரமான பூக்கள் உற்பத்தி செய்ய சிரமப்பட வேண்டியுள்ளது.குறித்த நேரத்தில் பூக்களை பறித்தாலும், உடுமலையில் சந்தை வாய்ப்புகள் இல்லை. எனவே திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்களை விற்பனைக்காக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தினால் உடுமலை பகுதியில் பூக்கள் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.
- வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது.
கடலூர்:
மார்கழி மாதம் என்றாலே மாதம் முழுவதும் பனி பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் அதிகாலையில் பனி மூட்டம், மதியம் வெயில், இரவு குளிர்ந்த காற்று மற்றும் அவ்வப்போது மழை என சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை 7 மணி வரை வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மார்கழி மாதம் முடிந்து 2 வாரம் ஆன நிலையில் நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் நடுவீரப்பட்டு, திருவந்திபுரம், வெல்லப்பாக்கம், நத்தப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது இந்த கடும் பனி பொழிவு காலை 7 மணி வரை படர்ந்து காணப்பட்டது.
இதன் காரணமாக இந்த பகுதிகளில் நள்ளிரவு முதல் வழக்கத்தை விட அதிக குளிர் காணப்பட்டது. மேலும் காலை நேரங்களில் வழக்கத்தை விட பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் என்பதால் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது.
மேலும் ெரயில், பஸ், லாரி, கார் வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காலை 7 மணி வரை முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பனிமூட்டம் காரணமாக கடும் அவதி அடைந்தனர்.
- நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்த அளவே பெய்ததால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை.
- இன்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் குறைந்த அளவே பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை.
பனிப் பொழிவு
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. மாலை 7 மணிக்கு தொடங்கும் பனிப் பொழிவு காலை 7 மணிவரை இருக்கிறது.
இதனால் காலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாரல் மழை
இந்நிலையில் இன்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பிற்பகலில் டவுன், சந்திப்பு, வண்ணார் பேட்டை, பாளை உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த திடீர் சாரல் மழையால் பொது மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
- வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டே செல்கின்றனர்.
- திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அவிநாசி :
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்க ழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. ஆனால் திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளான அவினாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர், பல்லடம், மங்கலம், ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளிலும் கடந்த ஆண்டுகளை விட வழக்கத்திற்கு மாறாக குளிரும், பனிப்பொழிவும் மிக அதிகமாக உள்ளது.
தினமும் மாலை 6 மணிக்கே ஒரு குளிர்ச்சியான காலசூழ்நிலை நிலவுவதுடன், காலை 8 மணி வரை கடுங்குளிர் நிலவுகிறது. இதேபோல் பனிப்பொழிவும் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் புறநகர் பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அளவுக்கு அ திகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டே செல்கின்றனர். கடந்த சிலநாட்களாக வீடுகளில் இரவில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், ஜர்க்கின், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் கூட அதிக குளிர், பனி காரணமாக காலையில் தாமதமாக எழும்பும் சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் குளிரும், பனியும் இருப்பதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.