என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்மிக பயணம்"
- கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார்.
- தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.
திருச்செந்தூர் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட புலவர்களில் ஒருவர் படிக்காசுப் புலவர். ஆதிகாலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் வட பகுதியில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் என்ற ஊரில் பிறந்தார். ஆதிகாலத்தில் இந்த ஊர் பொற்களந்தை என்று அழைக்கப்பட்டது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியம் கற்று தமிழில் மிகச்சிறந்த புலமை மிக்கவராக மாறினார். அவர் இயற்றிய "தொண்டை மண்டல சதகம்" மற்றும் "தண்டலையார் சதகம்" ஆகிய நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இளம் வயதில் இவர் ஊர் ஊராக போய் ஆலயங்களை தொழுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதோடு கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். சிலர் ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் அவரை கிண்டல் செய்தனர். என்றாலும் படிக்காசுப் புலவர் மனம் தளர்ந்தது இல்லை.
"ஒளி வீசும் விளக்கை அணைத்து விட்டு இவர்கள் வெளிச்சத்தை தேடி அலைகிறார்கள்" என்று பதில் அளித்து விட்டு அடுத்த ஊருக்கு சென்று விடுவார். அப்படி ஊர் ஊராக சென்ற அவர் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றார். அங்கு தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.
அப்போது அருகில் இருந்த அன்னை சிவகாம சுந்தரியிடமும் தனது ஏழ்மை நிலையை சொல்லி வருந்தி வேண்டுகோள் விடுத்தார். முருகருக்கு வேல் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தாய். மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். ஆனால் எனக்கு மட்டும் எதுவும் தரவில்லையே ஏன்? என்று உரிமையோடு அன்னையிடம் பாடல்களில் கேள்வி கேட்டார்.
அவர் பாடி முடித்த அடுத்த நிமிடம் சிதம்பரம் பஞ்சாட்சரப் படிகளில் 5 தங்க காசுகளை அன்னை சிவகாம சுந்தரி எடுத்து போட்டாள். இதை கண்டதும் புலவர் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகுதான் அவருக்கு படிகாசுப் புலவர் என்ற பெயர் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தில் உள்ள மற்ற தலங்களுக்கும் யாத்திரை சென்றார். அங்குள்ள மக்களுக்கு தனது அருட்கவியால் மகிழ்ச்சி அடைய செய்தார். அவரது பாடல்களையும் வாக்குகளையும் மக்கள் தெய்வ வாக்காக கருதி வரவேற்றனர்.
- போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
- உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.9.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை:
2025-2026-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரே முறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.9.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அறுபடைவீடு ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதி உடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
- அறநிலையத்துறை அலுவலர்கள் 40 பேர் என மொத்தம் 242 பேர் 5 பஸ்களில் சென்றனர்.
- சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிற 10-ந் தேதி ஊர் திரும்புகின்றனர்.
திருச்செந்தூர்:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணமாக தங்கும் இடம், உணவு வசதியுடன் 60 முதல் 70 வயதுக்குட்ட பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தற்போது 3-ம் கட்டமாக இன்று திருச்செந்தூரில் இருந்து ஆன்மிக பயணம் தொடங்கியது. இந்த பயணத்தில் மதுரை, சிவகங்கை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலங்களை சேர்ந்த 202 பக்தர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் 40 பேர் என மொத்தம் 242 பேர் 5 பஸ்களில் சென்றனர்.
இதை முன்னிட்டு நேற்று மாலை ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவிலில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் வைத்து கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலையில் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள இடத்தில் இருந்து ஆன்மீக பயணம் புறப்பட்டது. ஆன்மிக பயணத்தை திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், அறங்காவலர்கள் கணேசன், செந்தில்முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட அறங்காவலர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் அந்தோணிரூமன், சுதாகர், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மிக பயணமானது இன்று காலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு பழமுதிற்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய படை வீடுகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிற 10-ந் தேதி ஊர் திரும்புகின்றனர்.
- ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19.07.2024 அன்று தொடங்குகிறது.
- சிறப்பு தரிசனத்துடன் உணவு, பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2024-2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மூத்த குடிமக்கள் பயன் பெறும் கட்டணமில்லா ஆடி மாத அம்மன் கோவில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 19.07.2024 அன்று தொடங்குகிறது.
ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்கள் சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர், கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை, காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில், மாங்காடு, காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்க ளுக்கும்,
திருச்சி மண்டலத்தில் உறையூர், வெக்காளியம்மன் கோவில், உறையூர், கமலவள்ளி நாச்சியார் கோவில், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம், மாரியம்மன் கோவில், சமயபுரம், உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்க ளுக்கும்,
மதுரை மண்டலத்தில் மதுரை, மீனாட்சியம்மன் கோவில், வண்டியூர், மாரியம்மன் கோவில், மடப்புரம், காளியம்மன் கோவில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோவில், சோழவந்தான், ஜனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர், கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி, மாரியம்மன், அங்காளம்மன் கோவில், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், சூலக்கல், சூலக்கல் மாரியம்மன் கோவில், கோயமுத்தூர், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும்,
தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோவில், வராகியம்மன் கோவில், தஞ்சாவூர், பங்காரு காமாட்சியம்மன் கோவில், புன்னைநல்லூர், மகா மாரியம்மன் கோவில், திருக்கருகாவூர், கர்ப்பகரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம், துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில் களுக்கும்,
திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, பகவதியம்மன் கோவில், முப்பந்தல், இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம், ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு, பகவதியம்மன் கோவில், குழித்துறை, சாமுண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ஆடி மாத அம்மன் கோவில் முதற்கட்ட ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19.07.2024 அன்று தொடங்குகிறது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணவழிப் பை மற்றும் அந்தந்த கோவில்களின் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
- அறநிலையத்துறை சார்பில் உணவு, போர்வை, துண்டு, சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி:
தமிழகத்தில் அறுபடை வீடுகளாக போற்றப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களுக்கு கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைக்கும் திட்டத்தை அறநிலையத்துறை தொடங்கியது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயணத்தில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அறுபடை வீடுகளை தரிசனம் செய்தனர்.
2ம் கட்டமாக இந்த ஆண்டும் ஆன்மிக பயணம் செல்லும் திட்டம் இன்று பழனியில் தொடங்கியது.
அவர்கள் இன்று காலை பழனியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணத்துக்கு புறப்பட்டு சென்றனர். இதில் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பஸ்களில் நேற்று பழனிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்றிரவு பழனி மலைக்கோவிலுக்கு சென்ற மூத்த குடிமக்கள் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், இன்று காலை அவர்கள் பழனியில் இருந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை பழனி சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லெட்சுமி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் உணவு, போர்வை, துண்டு, சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நீண்ட நாட்கள் ஆகியும் ஜாபர் அலி ஆன்மிக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
கோவை:
கோவை தெற்கு உக்கடம் அமீன் காலனி 3-வது வீதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மனைவி அமீதா(வயது62).
இவர் கோவை பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை புரசைவாக்கம், பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான ஜாபர் அலி என்பவர் அறிமுகம் ஆனார்.
இவர் வெளிநாட்டிற்கு ஆன்மிக பயணம் அழைத்து சென்று வரும் பணி செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தார்.
மேலும் ஆன்மிக பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வருகிறேன். யாராவது அங்கு செல்ல விரும்பினால் என்னிடம் தெரிவியுங்கள். நான் அவர்களை அழைத்து செல்கிறேன் என தெரிவித்தார்.
இதனை நம்பி நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் 66 பேர் பயணம் செல்ல விரும்புவதாக கூறி என்னிடம் ரூ.36 லட்சத்து 51 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். நானும் அந்த பணத்தை வாங்கி ஜாபர் அலியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஜாபர் அலி ஆன்மிக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் என்னிடம் பணம் கொடுத்தவர்கள், பயணம் என்ன ஆனது என கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மேலும் எங்களது பணத்தையும் திரும்ப பெற்று தருமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து நான், ஜாபர் அலியிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பணத்தையும் தர மறுத்து அவர் ஏமாற்றி விட்டார். எனவே வெளிநாட்டு ஆன்மிக பயணம் அழைத்து செல்வதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட ஜாபர் அலி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் சென்னையைச் சேர்ந்த ஜாபர்அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






