படம் முடிந்து வரும் போது சர்ப்ரைஸாக ஒன்று இருக்கும் - இயக்குனர் ஆர்.கார்த்திக்

அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'.இப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆர். கார்த்திக்
ஆர். கார்த்திக்
Published on

அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

நித்தம் ஒரு வானம்

வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அபர்ணா பாலமுரளி - ஆர். கார்த்திக்

இதையடுத்து 'நித்தம் ஒரு வானம்' நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் இயக்குனர் கார்த்தி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'நித்தம் ஒரு வானம்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "கதைக்கு தேவை என்பதால் இதில் மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். படம் பார்த்து முடித்த பின்பு தேவையற்றது எதையும் நினைக்கமாட்டீர்கள். கதாபாத்திரங்களாக மூன்று பேரும் அவர்களுக்கான செயல்திறனை செய்திருக்கிறார்கள். படம் முடித்து வெளிவரும் போது சர்ப்ரைஸாக வேறு ஒன்று இருக்கும்" என்று இயக்குனர் ஆர். கார்த்திக் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com