என் மலர்

  நீங்கள் தேடியது "Soorarai Pottru"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


  சூர்யா - அக்‌ஷய்குமார்

  2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

  இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் உள்ள மூன்று பாடல்களின் ரெக்கார்டிங் முடிவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
  • 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

  2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

  தேசிய திரைப்பட விருது வென்ற அனைவருக்கும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல் வாழ்த்துக் கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


  ரஜினி பதிவில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப்போற்று பட இயக்குனர் மற்றும் விருது பெறும் திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என்று பதிவிட்டுள்ளார்.


  கமல் பதிவில், சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்க செய்துள்ளது தமிழ் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கமல் பதிவிட்டுள்ளார். 


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
  • தேசிய விருது கிடைத்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

  'சூரரைப்போற்று' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள். 'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.


  பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா, ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ். அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.

  மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் அஜய் தேவ்கான், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குனர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லட்சுமி பிரியா சந்திரமவுலி, இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் 58-வது தேசிய விருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.


  என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும். இந்த தேசியவிருது அங்கீகாரம். நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம் ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


  சூரரைப் போற்று

  இதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்கரா இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், சிறந்த பியூச்சர் ஃபிலிம் 'சூரரைப் போற்று' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,  படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன
  • 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


  சூரரைப் போற்று

  இதில் சிறந்த நடிகராக சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரரைப்போற்று படத்திற்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
  • இப்படத்தின் ரீமேக்கில் பட பெயரை வைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தில் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு பெயர் வைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

  சூரரைப் போற்று

  சூரரைப் போற்று

  ஊடகங்கள் ஆளுக்கு ஒரு பெயரை யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டு வருகின்றனர். இது பற்றி தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறியதாவது, படத்திற்கு உரிய நாளில் தலைப்பு அறிவிக்கப்படும் அதற்குள் வதந்தியான பெயர்களை கூற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ படத்தில் ரவுடி பேபி கனெக்‌ஷன் ஏற்பட்டுள்ளது. #Suriya #RowdyBaby
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காப்பான் படம் இறுதி கட்டத்தில் உள்ளது.

  தற்போது சூர்யா `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜி.வி.பிரகாஷின் 70வது படமாகும்.   ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை, மாரி 2 படத்தில் மிகவும் பிரபலமான ‘ரவுடி பேபி’ பாடலை பாடிய பாடகி தீ பாடி இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

  சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. #Suriya38 #GVPrakash
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படக்குழுவில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #SooraraiPottru
  `என்ஜிகே', காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை துவங்கிய விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஜேடியாக நடித்து வரும் அபர்ணா பாலமுரளி தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அபர்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன், இந்த செட்டில் உள்ள அனைவருமே அன்பாக உள்ளார்கள். இரும்பு பெண் சுதா மேடம் போன்று யாருமில்லை. மற்றும் அந்த முக்கியமான நபர், அவரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

  பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கோபிநாத்தின் மனைவி பார்க்கவியின் கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்து வருகிறார். பார்ப்பதற்கு பார்கவி போலவே இருப்பதால் அவரை இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள்.


  சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

  2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
   #SudhaKongara #AparnaBalamurali

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. #Suriya38 #SooraraiPottru
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்துள்ளார்கள். 

  சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

  2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
   #SudhaKongara

  ×