பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைக்கும்! சுதா கொங்கராவை வாழ்த்திய ஜிவி பிரகாஷ்

சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைக்கும்! சுதா கொங்கராவை வாழ்த்திய ஜிவி பிரகாஷ்
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை சுதா கொங்கரா தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காடி வருகிறது. 

இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுதா கொங்கரா.. சூரைப் போற்று இந்தி ரீமேக்கில் நீங்க நிகழ்த்தியுள்ள மேஜிக்கை இந்த உலகம் காண காத்திருக்கேன்! அந்த படம் பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைக்கும்! இதையடுத்து, உங்களோட அடுத்த தமிழ்ப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com