இத்தனை வகை உணவா..! மாதவனுக்கு விருந்தளித்த சுதா கொங்கரா

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.இவர் தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார்.
சுதா கொங்கரா -மாதவன்
சுதா கொங்கரா -மாதவன்
Published on

2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார்.

மாதவனுக்கு விருந்தளித்த சுதா கொங்கரா

தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. இவருக்கு சமீபத்தில் கையில் காயம் ஏற்பட்டு ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் மாதவனுக்கு ஒன்பது வகையான உணவுடன் விருந்தளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதற்கு சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்கவுள்ளாரா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com