search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சார்ப்பட்டா பரம்பரை"

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் பல விருதுகளை குவித்துள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

     

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை குவித்துள்ளது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது.

     

    சார்ப்பட்டா பரம்பரை

    சார்ப்பட்டா பரம்பரை

    மேலும் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு சிறந்த நடிகர் (ஆர்யா), சிறந்த பாடலாசிரியர் (அறிவு), சிறந்த துணை நடிகர் (பசுபதி) ஆகிய 3 விருதுகளை இப்படம் கைப்பற்றியுள்ளது.

    ×