ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்

லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆகப்போகிறார் ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.
ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்
Published on

பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து மக்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார். சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆகப்போகிறார் என செய்தி சில மாதங்களுக்கு முன் லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது.

லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. இவர் நடிக்க போகிறார் , அவர் நடிக்க போகிறார் என் வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்பொழுது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சுதீப் கிஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுதீப் கிஷன் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com