என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Show"

    • ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.
    • கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

    அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளைத் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    • தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாகிறது.
    • தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் தற்போது வெளியாகவில்லை

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளதால் கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், நாளை ஒருநாள் மட்டும் தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியாக தக் லைஃப் படத்தை கூடுதலாக திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    நாளை உலகெங்கும் வெளியாகும் இத்திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் தற்போது வெளியாகவில்லை.

    இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றி கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது எஎன்று கமல் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. இதற்காக மன்னிப்பு கேட்க மறுத்த கமல் கர்நாடகா வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாரிசு, துணிவு திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்துக்கு, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • மாவட்டம் முழுவதும் 11 தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாமல் திரையிட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    வேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்கள் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியானது.

    தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் விஜய், அஜித் ரசிகர்களுக்காக அதிகாலை 1 மற்றும் 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. மார்கழி மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ரசிகர்கள் மேள, தாளத்துடன் படங்களை வரவேற்று கண்டு ரசித்தனர். வேலூர் மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகின.

    பல தியேட்டர்களில் தலா 3 சிறப்பு காட்சிகள் வாரிசுக்கும், துணிவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தியேட்டருக்கு சென்று தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை பார்த்தனர்.

    வாரிசு, துணிவு திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்துக்கு, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் மாவட்டம் முழுவதும் 11 தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாமல் திரையிட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள், மேலாளர் மீது அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
    • விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    திருப்பூர் யூனியன் மில் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.


    தாசில்தார் மகேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் தியேட்டரில் ஆய்வு செய்த காட்சி

    அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 6 காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.

    விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிடப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .அந்த விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • ராயன் திரைப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • ராயன் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இந்நிலையில், ராயன் திரைப்படத்திற்கு 26ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி, காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை வெளியானது. #Kaala #ActorRajinikanth #SpecialShow
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

    காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.



    இந்நிலையில், காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர்.

    தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. சென்னை நகர் உள்பட உலகம்  முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kaala #ActorRajinikanth #SpecialShow
    ×