என் மலர்
செய்திகள்

காலா படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியானது - ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை வெளியானது. #Kaala #ActorRajinikanth #SpecialShow
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.
காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர்.
தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. சென்னை நகர் உள்பட உலகம் முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kaala #ActorRajinikanth #SpecialShow
Next Story