என் பட நேரத்தை மாற்றிக்கொள்வேன்.. போனிகபூருக்கு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் பட இயக்குனர்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகன் மற்றும் நட்டி நடித்துள்ள படம் பகாசூரன்.இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மோகன் ஜி- செல்வராகவன்
மோகன் ஜி- செல்வராகவன்
Published on

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

பகாசூரன்
பகாசூரன்

பகாசூரன்

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

மோகன் ஜி
மோகன் ஜி

மோகன் ஜி

இதனிடையே எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் இயக்குனர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள்
இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள்

இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள்

அதில், ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு நேரம் சொல்லுங்க போனிகபூர் சார்.. அதற்கேற்ப எனது சிவசிவாயம் முதல் பாடல் வெளியீட்டு நேரத்தை மாற்றுவேன்.. இன்று எனக்கு டபுள் தமாக்கா.. என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி ஏகே61 படத்தின் அறிவிப்பை கேட்டு கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com