இயக்குனர் செல்வராகவன் நெகிழ்ச்சி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.’எனது பிறந்தநாளுக்கு பொன்னான நேரத்தை ஒதுக்கி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் செல்வராகவன் நெகிழ்ச்சி
Published on

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்து எடுக்கும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் தான் செல்வராகவன்.

இவர் தனது திரையுலக பயணத்தை 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை எனும் படத்தில் இருந்து ஆரம்பித்தார். இப்படம் தான் தனுஷிற்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.

தனது இயக்குனர் அவதாரத்தில் இருந்து இப்பொழுது நடிப்பு அவதாரத்திற்கு மாறியுள்ளார் . தற்போது நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராயன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன். இன்று அவரது எக்ஸ் பக்கத்தில் 'எனது பிறந்தநாளுக்கு பொன்னான நேரத்தை ஒதுக்கி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எனக்கு கிடைத்த பெரிய விஷயம் எப்போதும் போல நான் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்" என்று அவரின் நெகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com