அவ்ளோ காஞ்சு போயா கிடக்குறீங்க தியானத்துக்கு? கேள்வி எழுப்பிய செல்வராகவன்

மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு பேசினார். இந்த பேச்சு பெரும் சர்சைக்கு உள்ளாகியுள்ளதுஇயக்குனரான செல்வராகவன் அவரது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவ்ளோ காஞ்சு போயா கிடக்குறீங்க தியானத்துக்கு? கேள்வி எழுப்பிய செல்வராகவன்
Published on

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். இந்த பேச்சு பெரும் சர்சைக்கு உள்ளாகியுள்ளது. இதுக்குறித்து பிரபல இயக்குனரான செல்வராகவன் அவரது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் `ஆன்மீக குரு என்பவர், தன்னை தேடுபவர்களை தானே தேடி வருவார்

மாறாக விளம்பரங்கள் மூலமாக சில விஷயங்களை பேசிவிட்டு மக்களை ஏமாற்றுபவர்களிடம் சென்று உட்கார்ந்து கொள்ளுமளவிற்கு மக்கள் காய்ந்துபோய் கிடக்கிறார்களா? யாரோ ஒருவர் எதையோ பேசுகிரார் அதை அப்படியே மனதில் ஏற்றிக்க்கொள்வீர்களா? உண்மையான குரு தன்னை வெளிப்படுத்தி கொள்ளவே மாட்டார். எல்லா மதமும் போதிப்பது நம் ஒவ்வொருவருக்குள் கடவுள் இருக்கிறார் என்பதையே. என்றும் செல்வராகவன் கூறியுள்ளார்.

புத்தரின் வழிமுறைகளை பின்பற்றியே சுலபமாக யோகா, தியானம் போன்றவற்றை பயிற்சி செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் கூறியபடி எளிமையாக நாசித் துவாரங்களின் வழியாகவே இவற்றை பயிற்சி செய்ய முடியும் என்றும் துவக்கத்தில் சுவாசம் குறித்த கவலைஇல்லாமல் இதை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com