என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சைந்தவி"
- இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
- தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.
ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
யூடியூப் சேனல்களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. தங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரி வேண்டுகோள் வைத்த பிறகும் இதுபோன்று கதைகள் பின்னப்படுவது வேதனையாக உள்ளது. ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் பயணிப்போம் என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜிவி பிரகாஷ் இந்த கஷ்டக்காலத்தில் என்னுடன் பயணிக்கும் நபர்களுக்கும், நண்பர்களுக்கும் என் முன்னாள் மனைவி சைந்தவிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
- சமீபத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நடிகை அமலா பால் தொடங்கி, சமந்தா, தனுஷ், டி இமான், இயக்குனர் பாலா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் மேலும் ஒரு ஜோடி இணைய உள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்த நடிகர் தன்னுடைய மனைவி பெயர் அடங்கிய டாட்டூவை நீக்கி உள்ளது தான்.
அதை செய்தது பாலிவுட் பிரபலம் சையிப் அலிகான் தான். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்தார் சையிப் அலிகான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் பெயர் தான் சாரா அலிகான்.
கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சையிப் அலிகான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம். இருப்பினும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்படுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் சையிப் அலிகானின் டாட்டூ தான். அவர் தன்னுடைய காதல் மனைவி கரீனாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டுவாக குத்தி இருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சையிப் அலிகான் - கரீனா கபூர் ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.
- இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும், சினிமா பின்னணி பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. மனைவி சைந்தவியை பிரிந்து விட்டதாக ஜி.வி.பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
இது ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில்,
புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவியைப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
- இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல், ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
சென்னை:
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே போன்ற படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தன.
இதற்கிடையே, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார், தனது மனைவி சைந்தவியைப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், நீண்ட யோசனைக்குப் பிறகு சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.
இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின்போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024
- தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
- கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி தம்பதி விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்களிலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. மேலும் இருவரும் விரைவில் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்ல உள்ளனர் என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
நட்சத்திர ஜோடியாக வளம் வந்த ஜி.வி. - சைந்தவி தம்பதி பிரிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் விக்ரமின் 'தங்கலான்', 'வீர தீரச் சூரன்', பாலாவின் 'வணங்கான்', சிவகார்த்திகேயனின், 'அமரன்', தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’காம்ப்ளக்ஸ்’.
- இப்படத்தின் இடம்பெற்றுள்ள கத்திக்கூவுது காதல் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காம்ப்ளக்ஸ்'. கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கத்தி கூவுது காதல் என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஜிவி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். ஞானகரவேல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்