search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "saif ali khan"

  • இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார்
  • நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார்.

  2024 தசரா அன்று தேவரா பாகம் 1- இன் டைட்டில் ரீவில் செய்தார்கள். இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார். இதற்கு முன் 8 ஆண்டுகளுக்கு ம் உன் வெளியான் ஜந்தா கேரேஜ் படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்தார்.

  நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர், சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

  இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியான 'Fear Song' என்ற பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • சமீபத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நடிகை அமலா பால் தொடங்கி, சமந்தா, தனுஷ், டி இமான், இயக்குனர் பாலா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் மேலும் ஒரு ஜோடி இணைய உள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்த நடிகர் தன்னுடைய மனைவி பெயர் அடங்கிய டாட்டூவை நீக்கி உள்ளது தான்.

  அதை செய்தது பாலிவுட் பிரபலம் சையிப் அலிகான் தான். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்தார் சையிப் அலிகான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் பெயர் தான் சாரா அலிகான்.

   

   

  கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சையிப் அலிகான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம். இருப்பினும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்படுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

   

  இதற்கு காரணம் சையிப் அலிகானின் டாட்டூ தான். அவர் தன்னுடைய காதல் மனைவி கரீனாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டுவாக குத்தி இருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சையிப் அலிகான் - கரீனா கபூர் ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • நடிகர் சைஃப் அலி கான் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்,
  • இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

  விக்ரம் வேதா வெற்றிக்கு பிறகு நடிகர் சைஃப் அலி கான் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்திருக்கும் இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.


  ஆதிபுருஷ்

  இதில், ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும் ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலிகானும் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.


  ஆதிபுருஷ்

  இந்நிலையில் நடிகர் சைஃப் அலி கான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை யாராவது 'லார்ட் ஆப் ரிங்ஸ்' திரைப்படம் போன்று பிரம்மாண்டமாக எடுத்தால் அதில் கண்டிப்பாக நான் நடிப்பேன். இது குறித்து நடிகர் அஜய் தேவ்கனுடன் 'கச்சே தாகே' திரைப்படத்தில் நடிக்கும் போதே கலந்துரையாடி இருந்தேன்.

  'இது எங்கள் தலைமுறையின் கனவுப் படம்' பாலிவுட் சினிமாவாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி இதுபோன்ற ஒரு திட்டத்தில் பணியாற்ற நான் விரும்புகிறேன்" என்று பேசினார்.

  • விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
  • இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

  புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

   

  விக்ரம் வேதா

  விக்ரம் வேதா

   

  இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா இந்தி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

  விக்ரம் வேதா

  விக்ரம் வேதா

  இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பண்டி (Bande) என்ற வீடியோ பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இந்த பாடல் தமிழில் கருப்பு வெள்ளை என்று தமிழில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

   

   

  • விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
  • இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுது.

  புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

   

  விக்ரம் வேதா படக்குழு

  விக்ரம் வேதா படக்குழு

  இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா இந்தி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

   

  விக்ரம் வேதா

  விக்ரம் வேதா

  இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி விக்ரம் வேதா இந்தி படத்தின் டிரைலர் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  • விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
  • இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுது.

  புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

   

  விக்ரம் வேதா

  விக்ரம் வேதா

  இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

   

  விக்ரம் வேதா

  விக்ரம் வேதா

  இந்நிலையில் விக்ரம் வேதா இந்தி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.  ×