சைஃப் அலி கான் வழக்கில் பெண் கைது

போலீசார் வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இருந்தபோது தனது செல்போனை தொலைத்துவிட்டதாக அந்தப்பெண் போலீசாரிடம் கூறினார்.
சைஃப் அலி கான் வழக்கில் பெண் கைது
Published on

மும்பை:

மும்பை, பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16-ந் தேதி நடந்த கொள்ளை முயற்சியில், அவர் கத்தியால் குத்தப்பட்டார். அவர் 5 நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முகமது ஷரிபுல் இஸ்லாம் பயன்படுத்திய சிம் கார்டு, மேற்குவங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மும்பை போலீசாரின் 2 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் மேற்குவங்க மாநிலத்துக்கு விரைந்தது. அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன், நாடியா மாவட்டம் சாப்ராவை சேர்ந்த குகுமோனி ஜஹாங்கிர் சேக் என்ற பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இருந்தபோது தனது செல்போனை தொலைத்துவிட்டதாக அந்தப்பெண் போலீசாரிடம் கூறினார். ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், குகுமோனி ஜஹாங்கிர் சேக், முகமது ஷரிபுல் இஸ்லாமிற்கு தெரிந்தவர் எனவும் தெரியவந்தது. முகமது ஷரிபுல் இஸ்லாம் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி அருகே உள்ள இந்திய-வங்காளதேச எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து, அந்தப்பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண்ணை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com