பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர ஜோடியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலிகான் தம்பதியினர் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டிப் பயணத்தை முடித்துக்கொண்டு மும்பை திரும்பினர்.
இந்நிலையில், கரீனா கபூர் 3 -வது முறை கர்ப்பமாக இருப்பதாக செய்தி இணைய தளங்களில் காட்டுத்தீயை பரவிய செய்திக்கு அவரது குழுவினர் மற்றும் குடும்பத்தினர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுவிட்டு கரீனா கபூர் வெளியே வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த புகைப்படக் கலைஞர்களிடமிருந்து அவரை மறைப்பதற்காக அவரது பாதுகாவலர் மற்றும் குழுவினர் குடை பிடித்தபடி அழைத்துச் சென்றனர்.
மேலும், அவர் அணிந்திருந்த உடற்பயிற்சி உடையில் அவரது வயிறு சற்று பருமனாகத் தெரிந்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவர் தனது 'பேபி பம்ப்'பை மறைக்கவே குடை பிடிக்கிறார்கள் என்றும், கரீனா 3-வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்றும் வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.
இந்த வதந்திகள் குறித்து கரீனா கபூருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரது மேலாண்மை குழுவினர் கூறுகையில், "கரீனா கபூர் கர்ப்பமாக இல்லை. நீங்கள் பரவும் செய்தி முற்றிலும் தவறானவை" என்று காட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், விடுமுறை பயணத்தின் போது சாப்பிட உணவுகள் காரணமாக சற்று பருமனாக தெரிந்துள்ளது என்று நகைச்சுவையாகவும் விளக்கமளித்து வருகின்றனர். சயீஃப் அலிகானின் சகோதரி சபா பட்டோடியும் "வாழ விடுங்கள்" என்று கூறி இந்த வதந்திகளை மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது சிகை அலங்கார கலைஞர் மிடேஷ் ரஜானி தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருப்பது போன்ற பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் சிரிக்கும் ஈமோஜிகள் மற்றும் பீட்சா ஈமோஜிகளைப் பதிவிட்டு, இது வெறும் 'உணவு வயிறு' தான் என்பதை மறைமுகமாக உணர்த்தி, இந்த வதந்திகளை மிகவும் கூலாகக் கடந்துள்ளார்.
ஏற்கனவே தைமூர், ஜே என்ற இரு மகன்கள் உள்ள நிலையில், தங்களுக்கு இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்பதை கரீனா கபூர் முந்தைய பேட்டிகளிலேயே தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது