சின்னத்திரைக்கு வரும் சைந்தவி

ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பாடகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூற இருக்கிறார்.சைந்தவியின் இந்த புதிய பயணம் சிறப்பாக அமையவேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரைக்கு வரும் சைந்தவி
Published on

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாசும், சைந்தவியும் பிரிந்தனர்.

'எங்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப்பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்' எனவும் அறிவிக்கை வெளியிட்டு இருவரும் பிரிந்தனர்.

விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஜி.பி.பிரகாஷ் நடிப்பு, இசையமைப்பு என வழக்கம் போல சினிமாவில் படு பிசியாக இருக்கிறார். ஆனால், சைந்தவி என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் டி.வி.நிகழ்ச்சிகளில் சைந்தவி தோன்ற இருக்கிறார். ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பாடகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூற இருக்கிறார்.

சைந்தவியின் இந்த புதிய பயணம் சிறப்பாக அமையவேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com