search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரீனா கப்பூர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • சமீபத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நடிகை அமலா பால் தொடங்கி, சமந்தா, தனுஷ், டி இமான், இயக்குனர் பாலா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் மேலும் ஒரு ஜோடி இணைய உள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்த நடிகர் தன்னுடைய மனைவி பெயர் அடங்கிய டாட்டூவை நீக்கி உள்ளது தான்.

    அதை செய்தது பாலிவுட் பிரபலம் சையிப் அலிகான் தான். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்தார் சையிப் அலிகான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் பெயர் தான் சாரா அலிகான்.

     

     

    கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சையிப் அலிகான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம். இருப்பினும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்படுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

     

    இதற்கு காரணம் சையிப் அலிகானின் டாட்டூ தான். அவர் தன்னுடைய காதல் மனைவி கரீனாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டுவாக குத்தி இருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சையிப் அலிகான் - கரீனா கபூர் ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×