என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திகிலூட்டும் Immortal படத்தின் டீசர் வெளியானது
    X

    திகிலூட்டும் "Immortal" படத்தின் டீசர் வெளியானது

    இம்மார்ட்டல் படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.

    சில மாதங்களுக்கு முன் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

    கயாடு லோஹர் முதன் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முகில்பெட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    மேலும், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு இம்மார்டல் என தலைப்பிடப்பட்டுள்ளது.

    இப்படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தின் இசையில் சாம் சி.எஸ் மேற்கொள்ள அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரிக்கிறார்.

    ஜிவி பிரகாஷ் அவரது 25-வது படமான கிங்ஸ்டன் திரைப்படத்தை தொடர்ந்து இடிமுழக்கம், 13 மற்றும் பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இம்மார்ட்டல் படத்தின் திகிலூட்டும் டீசர் வெளியானது.

    Next Story
    ×