அரசியலுக்கு வருவீர்களா? பாலா அளித்த நச் பதில்

பலர் என்னிடம் உதவி கேட்டு மனுக்கள் அளித்து வருகின்றனர்.கடைசி வரை என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வேன்.
அரசியலுக்கு வருவீர்களா? பாலா அளித்த நச் பதில்
Published on

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனியில் தன்னார்வலர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் பாலா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்.

அப்போது அவருடன் ஏராளமானோர் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் பாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உதவி செய்தாலே அடுத்து அரசியலுக்கு வருகிறீர்களா? என கேட்கிறார்கள். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு அறவே கிடையாது. பல்வேறு இடங்களுக்கு சென்று என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். அப்போது பலர் என்னிடம் உதவி கேட்டு மனுக்கள் அளித்து வருகின்றனர்.

அதனை படித்து அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகின்றேன். கடைசி வரை என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com