search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஹோண்டாவை பின்னுக்குத் தள்ளி விற்பனையில் அசத்தும் ஹண்டர் 350
    X

    ஹோண்டாவை பின்னுக்குத் தள்ளி விற்பனையில் அசத்தும் ஹண்டர் 350

    • ராயல் என்பீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
    • புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் ஆகும்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஹண்டர் 350 மாடல் குறைந்த விலையில் எண்ட்ரி லெவல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹண்டர் 350 மாடல் விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 17 ஆயிரத்து 118 ஹண்டர் 350 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையானதை விட குறைவு ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

    செப்டம்பரில் ஹோண்டா சிபி350 மாடல் மொத்தத்தில் 3 ஆயிரத்து 980 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆயிரத்து 714 யூனிட்கள் விற்பனையானது. விற்பனையில் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட ஹண்டர் 350 மற்றும் சிபி350 விலை காரணமாக இருக்கலாம். இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.

    ஹோண்டா சிபி350 விலை ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை மட்டுமின்றி விற்பனை விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்டவையும் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரிக்க காரணமாக இருக்கும். ஹோண்டா தனது சிபி350 மோட்டார்சைக்கிளை பிங்விங் விற்பனை மையங்களிலேயே விற்பனை செய்து வருகிறது.

    Next Story
    ×