என் மலர்
நீங்கள் தேடியது "இருசக்கர வாகனங்கள்"
- நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
- ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவம் பதிவான வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 517 ஆட்டோக்கள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 73 ஆயிரத்து 577 டிராக்டர்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 40 லட்சத்து 23 ஆயிரத்து 923 வாகனங்கள் பதிவாகியுள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதம் 18 லட்சத்து 27 ஆயிரத்து 337 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 120.21 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் அதிகம் பதிவாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 735 ஆக இருந்த இருச்சக்கர வாகனங்களின் பதிவு, அக்டோபர் மாதம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 ஆக எழுச்சியடைந்துள்ளது. இது 144.60 சதவீதம் உயர்வு ஆகும்.
இதேபோல 2 லட்சத்து 99 ஆயிரத்து 369 ஆக இருந்த தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 ஆகவும், 72 ஆயிரத்து 124 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 ஆகவும் ஏறுமுகம் கண்டிருக்கிறது. பண்டிகை கால 42 நாட்களில், அதாவது செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் 52 லட்சத்து 38 ஆயிரத்து 401 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டு 43 லட்சத்து 25 ஆயிரத்து 632 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு, தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்ததால் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்தது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறும்போது, "ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் வரி குறைப்பு, பண்டிகை காலம் மற்றும் கிராமப்புற மக்களிடம் மறுமலர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் வந்ததால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் அக்டோபர் மாதம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.
வரவிருக்கும் வாகனங்களின் புதிய மாடல்கள், ஆரோக்கியமான நிதி நிலைமை, நிலையான எரிபொருள் விலை ஆகியவை தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கின்றன" என்றார்.
- இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
- விதிகளின்படி பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. விதிகளின்படி பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.
- இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காக நடவடிக்கை.
- தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தகவல்.
வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக வாங்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களுடன் இரண்டு BIS (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பொருந்தும், இதன்மூலம் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கை பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 4 இருசக்கர வாகனநிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது.
- வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன நிறுத்தங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர்.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2 வருடங்களாக 319 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று உள்ளன. 4 இருசக்கர வாகனநிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது. சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து வாகனங்களின் உரிமையை கோரலாம் என்று தெற்கு போலீசார் அறிவித்துள்ளனர்.
- திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.
- பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சித்தாமூர், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர்.
இந்த வழக்கு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர். விடுதலைக்கு பின் அவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்று அங்கு தங்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக நிற்கும் இருசக்கர வாகனங்களை திருடி நரிக்குறவர்களுக்கு விற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், சித்தாமூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி இதே மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு குறைவான விலையில் விற்று வந்துள்ளார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை தற்போது பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






