search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Toll gate"

    • சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.

    செங்கல்பட்டு:

    சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிட்டுள்ளது. கட்டண உயர்வு வரும் ஏப்.1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
    • கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

    மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • சுங்கச்சாவடி அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • சுங்கச்சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு, சித்தோடு, கவுந்தப்படி, கோபிசெட்டி பாளையம் சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், சாம்ராஜ் நகர் வழியாக மைசூர் சாலை அமைந்து உள்ளது. இந்த வழியாக மைசூருக்கு தினமும் கார், வேன், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு முதல் பண்ணாரி வரை கவுந்தப்பாடி வழியாக 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து கவுந்தபாடி அருகே உள்ள ஓடத்துறை அடுத்த பால பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என தகவல் பரவியது.

    இதையடுத்து பால பாளையம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியது.

    இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கவுந்தப்பாடி- கோபிசெட்டிபாளையம் ரோடு பாலப்பாளையம் பகுதியில் கவுந்தப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், 200 பெண்கள் மற்றும் விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கவுந்தப்பாடி, பாலப்பாளையம், சூரியம்பாளையம், கோவில்பாளையம், ஓடத்துறை, காளிசெட்டிபாளையம், பொம்மநாயக்கன் பாளையம், ஒத்தக் கதிரை மற்றும் சற்று வட்டார பகுதிகளில் 50 மேற்பட்டம் கிராமங்கள் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இந்த பகுதிகளில் சேர்ந்த விவசாயிகள் கவுந்தப்பாடி பாலப்பாளையம் வழியாக இரு சக்கர வாகனங்கள், வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் கோபி, சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயவிளை பொருட்களை கொண்டு செல்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதியில் சர்க்கரை மார்க்கெட் அமைந்தள்ளது. இதே போல் 72 சர்க்கரை குடோன்கள் அமைந்துள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கரும்புகளை கொண்டு வந்து வருகிறார்கள். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் கவுந்தப்பாடி பகுதியில் ஓழுங்கு முறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனை கூடத்துக்கு ஏராளமான விவசாயிகள் தேங்காய் உள்பட பல பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதே போல் வியாபாரிகள் பலர் வந்து தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

    இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தினமும் கார், வேன், சரக்கு வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதனால் இந்த ரோட்டில் எப்போது வாகன போக்கு வரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த வழியாக சென்று வர அடிக்கடி சுங்ககட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் விசாயவிளை பொருட்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.

    எனவே இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. சுங்கச்சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் விவசாயிகள் பலர் டிராக்டர்களுடன் வந்திருந்தனர். அந்த டிராக்டர்களை ரோட்டோரம் நிறுத்தி சுங்கச்சாவடி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    சேலம்:

    தமிழகத்தை பொறுத்தவரை 46 சுங்கச்சாவடிகள் மூலம், நாள் ஒன்றுக்கு 17 கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    குறிப்பாக கிருஷ்ணகிரி-தோப்பூர் வரை 62 கி.மீ. சாலை, கிருஷ்ணகிரி முதல் தும்பிபாடி வரையிலான 86 கி.மீட்டர் சாலைக்கு பாளையம் சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.715.86 கோடி கட்டணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதேபோல் தும்பிபாடியிலிருந்து நாமக்கல் வரை (68.62 கிமீ) செல்லும் வாகனங்களிடமிருந்து ஓமலூர் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கிறது.

    இந்த நிலையில் ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடிகளில் ஜூன் மாதம் 2010-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 133.36 கோடி வருவாய் இழப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஏற்படுத்தி இருப்பது சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    இதில் பாளையம் சுங்கச்சாவடி ரூ. 73.88 கோடியும், ஓமலூர் சுங்கச்சாவடியில் 54.48 கோடியும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலைகள் அமைக்க முன்னணி நிறுவனங்களுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வருவாய்ப் பகிர்வு ஒப்பந்தத்தில் தும்பிப்பாடி-சேலம் பகுதி மட்டும் சேர்க்கப்பட்டு, சேலம் புறவழிச்சாலை அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதுபோல் தொப்பூர்-தொப்பூர் கேட் வரை 7.4 கிலோ மீட்டருக்கான விதி சேர்க்கப்படவில்லை. இப்படி பல்வேறு வகைகளில் இழப்பை ஏற்படுத்துள்ளதை சி.ஏ.ஜி கண்டுபிடித்துள்ளது.

    • தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.

    சென்னை :

    இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது.

    சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

    இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்.

    இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

    இந்த கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும், அதேவேளையில் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சுங்கச்சாவடிகளில் 40 சதவீத கட்டணம் குறைக்கப்படும், 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்போது சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது வணிகர்கள், வாகன உரிமையாளர்களை மட்டுமல்லாமல் மக்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டால் மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஏப்ரல் 1-ந்தேதி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்கள் கட்டண சலுகை தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள ஊர்களில் வாழும் மக்களின் வணிக வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டண சலுகையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது ஆகும்.

    உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு 2008-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவு தான் காரணம். அப்போது அந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து அந்த ஆணை இப்போது நடை முறைக்கு வந்திருக்கிறது.

    உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுங்க கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.



    சென்னையை அடுத்த செங்குன்றம் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் மக்கள் என்பதால், இத்தகைய மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு சிக்கலாக மாறக் கூடும். அதை தவிர்க்கும் வகையிலும், உள்ளூர் மக்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் வகையிலும் உள்ளூர் வாகனங்களுக்கான 50 சதவீதம் கட்டண சலுகை ரத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss
    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. #TollGate
    சென்னை:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளிலும் தரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    6 இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளான சென்னை- பெங்களூர், சேலம், மதுரை சுங்கசாவடிகள் செங்கல்பட்டு பரனுர், சூரப்பேடு, சென்னை பைபாஸ் ஆகியவற்றில் 2005-ம் ஆண்டு முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2016 வரை ரூ.1,500 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.


    பிற இடங்களில் உள்ள சுங்க சாவடிகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, வேலூர் (2), கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி (3), சிவகங்கை (2) ஆகியவற்றின் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    சுங்க சாவடி கட்டண உயர்வு குறித்து மதுரையைச் சேர்ந்த வணிகர் எஸ்.அருண் கூறியதாவது:-

    மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு முறை செல்ல வாகன சுங்க கட்டணம் ரூ.800 செலுத்தி வருகிறோம். சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.

    ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. பெருங்களத்தூர்- செங்கல்பட்டு வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தினமும் 1 லட்சம் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.

    டீசல் கட்டணம் உயர்வு, சுங்க கட்டண உயர்வால் ஆம்னி பஸ்களை நஷ்டத்தில் இயக்கி வருகிறோம். சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TollGate
    தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கிறது. #TollGate
    சென்னை:

    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களுக்கான கட்டண விகிதத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நிர்ணயம் செய்கிறது.

    ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடப்படுகிறது. டெண்டர் எடுத்தவர்கள் தங்கள் ஆட்கள் மூலம் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வேறுபடுகிறது.

    நாட்டிலேயே சுங்க கட்டணம் வசூலில் முன்னணியில் இருக்கும் 56 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கிறது.

    வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்தனர்.

    சேலம்-உளுந்தூர் பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் -உளுந்தூர்பேட்டை, நல்லூர்-சென்னை, திருச்சி-திண்டுக்கல், நத்தக்கரை-வீரசோழபுரம், விக்கிரவாண்டி தடா (ஆந்திர மாநிலம்), பொன்னம்பலபட்டி ஆகிய 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்.

    இதன் வழியே செல்லும் வாகனங்களுக்கு கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி கார்களுக்கு 10 சதவீதம் கட்டணம் அதிகரிக்கும், பஸ்கள், லாரிகளுக்கு 4 முதல் 6 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும்.


    இதுபற்றி வாகன உரிமையாளர்கள் கூறும்போது, ‘நாளுக்கு நாள் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்த முடிவு செய்து இருப்பதால் மேலும் பாதிக்கப்படுவோம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகள் உள்பட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 21 சதவீத அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சுங்க கட்டணம் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் பல்வேறு வசதிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் பல சாலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. குடிநீர் வசதி, அவசரகால தொலைபேசி வசதி, உணவு விடுதிகள் போன்றவை உறுதியளித்தபடி செய்து தரப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் இரவில் பஸ்களில் தூங்கிக்கொண்டு செல்லும் பயணிகளின் தூக்கம் கெடுகிறது. சுகாதாரமான கழிப்பிட வசதிகள் இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயணிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது. #TollGate
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 2-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடித்தது.
    நாகர்கோவில்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 2-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடித்தது.

    குமரி மாவட்டத்திலும் லாரிகள் ஓடவில்லை. லாரிகள் அனாதை மடம் மைதானத்திலும், கோட்டார் பகுதியில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், சொந்த இடங்களிலும் நிறுத்தி வைத்திருந்தனர். லாரிகள் ஓடாததால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்கள், ரப்பர் சீட்டுகள், ரப்பர் பால், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வில்லை. இதனால் கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
    இதனால் இவை அனைத்தும் தேக்கம் அடைந்து உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் லாரிகள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வராததால் கோட்டார் மார்க்கெட் பகுதிகளையிழந்து காணப்பட்டது. அப்டா மார்க்கெட், கனக மூலம் சந்தைக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் குறைவான அளவே வந்தன. இதனால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து லாரி உரிமை யாளர் சங்கத்தின் செயலாளர் மனோகரன் கூறியதாவது:-

    எங்களது பிரச்சினைக்கு முடிவு காணும் வரை நாங்கள் லாரிகளை இயக்க மாட்டோம். குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாததால் கோடிக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பருப்பு, உளுந்து பொருட்களும் வெளியூர்களில் இருந்து வராததால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். என்றார்.
    ×