என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அரை மணி நேரம்: வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?- நீதிமன்றம் கேள்வி
    X

    ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அரை மணி நேரம்: வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?- நீதிமன்றம் கேள்வி

    • தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான்.
    • ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது.

    மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது.

    அத்துடன் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×