என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சுங்கச்சாவடி மீது பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்
    X

    சுங்கச்சாவடி மீது பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்

    • கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சுங்கச்சாவடி மீது பயங்கரமாக மோதியது.
    • விபத்தில் இன்னோவா கார் ஒன்று சேதம் அடைந்தது.

    திருவள்ளூரை அடுத்த பட்டறை பெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி உள்ளது. சென்னை- திருத்தணி இடையிலான இந்த சுங்கச்சவாடி எப்போதும் பரபரப்பானதாக காணப்படும்.

    இன்று மதியம் கண்டெய்னர் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி, கண்டெய்னர் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. சுங்கச்சாவடியில் Fastag பதிவிடுவதற்கான சற்று குறைவான வேகத்தில் வந்தது. அப்போது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, வசூல் செய்யும் நபர் இருக்கும் கூண்டு மீது பயங்கரமாக மோதியது.

    கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஊழியர் வெளியேறியதால் அதிர்ஷ்டவமாக உயிர்தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த லாரி நின்று கொண்டிருந்த இன்னோவா கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சேதம் அடைந்தது. இருந்தபோதிலும், காரில் இருந்த 3 பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. லாரி மோதியதால் சுங்கச்சாவடி சேவை சிறிது நேரம் பாதித்தது.

    Next Story
    ×