தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

மரியதாஸ் வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.டிக்ஸன் மோட்டார் சைக்கிளுக்கும் சிலர் தீ வைத்தனர்.
தெர்மல் நகர் எடைநிலைய ஊழியரின் மோட்டார் சைக்கிள் தீயில் எரியும் காட்சி.
தெர்மல் நகர் எடைநிலைய ஊழியரின் மோட்டார் சைக்கிள் தீயில் எரியும் காட்சி.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாள முத்துநகர் அன்னை திரேசா மீனவர் காலனியை சேர்ந்தவர் மரியதாஸ்(39).

நேற்று இரவு வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த மரியதாஸ் வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்டு எழுந்து பார்க்கும்போது,அவரது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக வெளியே வந்த மரியதாஸ் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்துள்ளார். எதற்காக அவரது மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது? யார் வைத்தார்கள்? என்று தெரியவில்லை.

இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தெர்மல் நகர் எடை நிலையம் அருகே எடை நிலைய ஊழியரான தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த டிக்ஸன் என்பவரது மோட்டார் சைக்கிளையும் சிலர் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

இது குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com