என் மலர்
நீங்கள் தேடியது "Sivaganga custodial death"
- அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
- பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரை நகை திருட்டு புகாா தொடர்பாக சிறப்பு படை பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் 2 மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அதனை திருப்பி அனுப்பியது. பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நிகிதா புகார் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அருண்குமார், கோவில் ஊழியர்கள், அஜித்குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், நிகிதாவிடம் இருந்து கார் சாவி வாங்கிக்கொடுத்த கண்ணன், அஜித் நண்பர் வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
- அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
- 2-வது நாளான இன்று மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவரை நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக கொலை தொடர்பாக அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார், புகார் கொடுத்து நிகிதா, உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவில் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்களும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
இந்த நிலையில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவர்களை காவலில் எடுக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் 5 பேரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் இன்று மாலை 5.30 மணிக்கு அவர்களை ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் 5 போலீஸ்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தொடங்கினர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நீடித்ததாக தெரிகிறது.
2-வது நாளான இன்று காலை மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அஜித்குமார் கொலை வழக்கில் நெருக்கடி கொடுத்த மேலதிகாரி யார்? என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும் போலீஸ்காரர்களிடம் பெற்றதாக தெரிகிறது.
இன்றைய விசாரணையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முக சுந்தரம் மற்றும் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோரும் ஆஜராகினர்.
- அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
- சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவரை நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக கொலை தொடர்பாக அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார், புகார் கொடுத்து நிகிதா, உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவில் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்களும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த நிலையில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவர்களை காவலில் எடுக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்வபாண்டி, கைதாகியுள்ள 5 போலீஸ்காரர்களுக்கு இன்று, நாளையும் என 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நாளை மாலை 5.30 மணிக்கு மீண்டும் 5 போலீஸ்காரர்களை ஆஜர்படுத்த வேண்டும் என சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரையும் விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
- அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு?
- ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்.
சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சி.பி.ஐ. என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைப்பாவையாக உள்ளது.
* அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு?
* சாத்தான்குளம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்?
* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கு அவமானம் இல்லையா?
* ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
- அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்?
சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். நீதி வேண்டும், நீதி வேண்டும், அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று த.வெ.க.வினர் முழக்கமிட்டனர்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
* 24 பேரின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மன்னிப்பு கேட்பாரா?
* திருப்புவனம் அஜித்தை தவிர லாக்அப் மரணமடைந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் sorry சொல்லாதது ஏன்?
* அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்?
* தி.மு.க. அரசு இப்போது sorry-மா மாடல் அரசாக மாறிவிட்டது
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. போராட்டத்துக்கு 20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு சென்னையில் இன்று நடைபெறும் த.வெ.க. போராட்டத்துக்கு 20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த நிபந்தனை மீறினால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக போராட்ட களத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
த.வெ.க. போராட்டத்தையொட்டி 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.
- சென்னையில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்திற்கு 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் விஜயும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்ள உள்ளார்.
மாநில அளவில் நடைபெறும் த.வெ.க.வின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் என்பதாலும், தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாலும் கட்சித் தொண்டர்கள் திரளாக அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து 5 வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் செல்வதற்கு அப்பகுதியில் தயாராக காத்திருந்தனர். அப்போது அவர்களை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.
- சிபிஐ விசாரணை நடத்த தேவையான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர் லாலை நியமித்ததுடன், அவர் தனது அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர் லால், கடந்த சில நாட்களாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று, மூடி சீலிடப்பட்ட உறையில் அவர் தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான் குளம் வழக்கு போல, இந்த வழக்கும் தாமதம் ஆகும் என்பதால், அதற்கு தடை கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றினால், இதே குற்றச்சாட்டை எழுப்பும் வாய்ப்புள்ளதாக கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் அஜித்குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கையை படித்து பார்த்தில், இவ்வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துள்ளார். மீதி விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் முடிக்க வேண்டும். காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க வேண்டும்.
வழக்கை விசாரிக்கும் அலுவலர்களை ஒருவாரத்தில் நியமிக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,
பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும். வழக்கு தொடர்பான விசாரணைக்கு தென்மண்டல காவல் தலைவர், மதுரை, சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்கள், சிவகங்கை ஆட்சியர் சிபிஐ-க்கு உதவ வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த தேவையான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
- இவ்வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர் லாலை நியமித்ததுடன், அவர் தனது அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர் லால், கடந்த சில நாட்களாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று, மூடி சீலிடப்பட்ட உறையில் அவர் தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான் குளம் வழக்கு போல, இந்த வழக்கும் தாமதம் ஆகும் என்பதால், அதற்கு தடை கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றினால், இதே குற்றச்சாட்டை எழுப்பும் வாய்ப்புள்ளதாக கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் அஜித்குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கையை படித்து பார்த்தில், இவ்வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துள்ளார். மீதி விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகள் முடிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இன்னும் ஒரு வார காலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரி தனது விசாரணையை தொடங்க வேண்டும். இவ்வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
- த.வெ.க. தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதனிடையே, அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், ஐகோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த ஜூலை 3-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கிடைக்காததால், ஜூலை 6-ந்தேதி போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் அதற்கும் அனுமதி கிடைக்காததால் த.வெ.க. போராட்டம் மீண்டும் தள்ளிப்போனது.
இந்தநிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பான த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அஜித்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.
- அஜித்குமார் குடும்பத்தினரிடம் பணம் தருவதாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த மகாராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மடப்புரம் கோவிலில் பதிவான கேமரா காட்சிகளை திருப்புவனம் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரகசியமாக எடுத்துச்சென்று விட்டனர். இதேபோல அஜித்குமார் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாாமல் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டு, அதற்காக பணம் தருவதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இதுபோன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். அஜித்குமார் மரணத்தில் உள்ள உண்மைகளை மறைக்க முயற்சி செய்து வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை (8-ந்தேதி) விசாரணைக்கு வருகின்றன. அந்த வழக்குகளுடன் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.
- சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.
- இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
தேனி:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு நடந்த அதே இடத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முஸ்லிம் முன்னேற்ற மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இது வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் செயல்படும் நிகழ்வாகும். இந்த மாநாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
திருப்புவனத்தை சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்று 'சாரிம்மா' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்க தயங்குகின்றனர். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை பாதுகாக்கும் அந்த சார் யார்? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
த.வெ.க. தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது அவர்களின் விருப்பம். அதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதும், இணையாமல் இருப்பதும் அவர்களது விருப்பம்.
ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைந்த சிலைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






