என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கருப்பு உடையில் வந்த விஜய் - த.வெ.க. போராட்டம் தொடங்கியது
    X

    கருப்பு உடையில் வந்த விஜய் - த.வெ.க. போராட்டம் தொடங்கியது

    • த.வெ.க. போராட்டத்துக்கு 20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு சென்னையில் இன்று நடைபெறும் த.வெ.க. போராட்டத்துக்கு 20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த நிபந்தனை மீறினால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

    அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக போராட்ட களத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

    த.வெ.க. போராட்டத்தையொட்டி 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×