என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற  த.வெ.க. நிர்வாகிகள் காஞ்சிபுரத்தில் கைது
    X

    போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற த.வெ.க. நிர்வாகிகள் காஞ்சிபுரத்தில் கைது

    • ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.
    • சென்னையில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்திற்கு 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் விஜயும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்ள உள்ளார்.

    மாநில அளவில் நடைபெறும் த.வெ.க.வின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் என்பதாலும், தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாலும் கட்சித் தொண்டர்கள் திரளாக அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து 5 வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் செல்வதற்கு அப்பகுதியில் தயாராக காத்திருந்தனர். அப்போது அவர்களை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

    சென்னையில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×