

திருவள்ளூர்:
ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் மில்கி ராஜா சிங் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத்தலைவர் காந்திமதி நாதன், மாவட்ட செயலாளர் மணி, சேகர், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.